இந்தியாவில் அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் புதிய கார்… விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jan 09, 2023, 06:28 PM IST
இந்தியாவில் அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் புதிய கார்… விலை எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் விற்பனையில் உலகளவில் இந்திய மூன்றாம் இடத்தில் உள்ளதால் அனைத்து கார் நிறுவனங்களின் கவனமும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தார் 2WD என்ற மாடலை அறிமுகம் செய்துள்ள மஹிந்திரா நிறுவனம் அறிமுக சலுகையாக எக்ஸ்-ஷோரூம் ரூ.9 லட்சத்து 99 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மஹிந்திரா தார் எண்ட்ரி லெவல் மாடல் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகை உயர்வு: பாஜக கண்டனம்

மேலும் இந்த கார் மூன்று ரகங்களில் இரண்டு புது நிறங்கள் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வருகிறது. அறிமுக சலுகை அந்த காரை முன்பதிவு செய்யும் முதல் 10,000 பேருக்கும் மட்டுமே என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் மாடல் வினியோகம் வரும் ஜன.14 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. 

இதையும் படிங்க: சந்தா கோச்சார், தீபக் கோச்சாரை விடுவிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

மஹிந்திரா தார் 2WD பற்றிய சில தகவல்கள்: 

  • மஹிந்திரா தார் 2WD மாடலில் 2.0 லிட்டர் எம்ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. 
  • என்ஜின் 150 ஹெச்பி பவருடனும் 320 நியூட்டன் மீட்டர் டார்க்குடனும் வருகிறது. 
  • 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 117 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வெளிப்படுத்துகிறது. 
  • 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • மஹிந்திரா தார் 4WD மாடலில் தற்போது எலெக்டிரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 
  • இதன் LX டீசல் மாடலில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரென்ஷியல் அம்சம் ஆப்ஷாக வழங்கப்படுகிறது. 
  • ஸ்டைல் பேக், முன்புறம் மற்றும் பின்புற ஆர்ம் ரெஸ்ட்கள், கூடுதல் பி-ஸ்போக் அக்சஸரீக்களை மஹிந்திரா புதிய தார் மாடலுடன் வழங்குகிறது. 
  • புதிய மஹ்ந்திரா தார் 2WD LX டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஹார்டு-டாப் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம் )
  • 2WD LX பெட்ரோல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஹார்டு டாப் விலை ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) 
     

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Classic 350 ரசிகர்களே… 2026 மாடல் வந்தாச்சு! இனி பயணத்தில் டென்ஷன் இல்லை
இந்தியாவின் நம்பர் 1 CNG கார் எது தெரியுமா? மக்கள் போட்டி போட்டுட்டு வாங்குறாங்க