Auto Expo 2023: 3 வருடங்களுக்கு பிறகு.. பிரம்மாண்டமாக தொடங்கும் ஆட்டோ எக்ஸ்போ! - எங்கு? எப்போது? முழு விபரம்

By Raghupati RFirst Published Jan 9, 2023, 3:31 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பிரமாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவான ‘ஆட்டோ எக்ஸ்போ-மோட்டார் ஷோ’ தொடங்க உள்ளது.

நொய்டாவில் வருகின்ற ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை நடத்துகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆட்டோமொபைல்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கான்செப்ட் கார்கள், வணிக வாகனங்கள் (டிரக்குகள் மற்றும் பேருந்துகள்), உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளார்கள். மாருதி சுசுகி (Maruti Suzuki), ஹூன்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) டொயோட்டா (Toyota), கியா (Kia), எம்.ஜி (MG) போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளார்கள்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

எங்கே நடக்கிறது ?

உத்தரபிரதேசத்தின், கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் நடக்க உள்ளது. ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் இதில் முதலில் ஊடகத்தின் அனுமதிக்கப்பட உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வணிக பார்வையாளர்கள் ஜனவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பங்கேற்கலாம். ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடக்கும் இடத்தை எப்படி அடைவது?

இந்தியா எக்ஸ்போ மார்ட் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டா-நொய்டா எக்ஸ்பிரஸ்வே (மகாமாயா ஃப்ளைஓவரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில்) உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 8,000 கார்கள் நிறுத்த இடம் உள்ளது.

பாஸ் அல்லது டிக்கெட்டுகளை எப்படி பெறுவது?

கண்காட்சி மையத்தை செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அணுக முடியும் என்றாலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் (பணியாளியுடன்) போன்றவர்களுக்கு சில விதிவிலக்குகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ. 350 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பெற  https://in.bookmyshow.com/events/auto-expo-the-motor-show-2023/ET00343313 இந்த இணையதளத்தை அணுகலாம்.

இதையும் படிங்க..கமிஷன்! கலெக்‌ஷன்! கரப்ஷன்! இது திமுகவின் பாதை மாறா பயணம்.. திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

click me!