சீனா கார் மார்க்கெட்டை இந்தியா பிடிக்க 140 ஆண்டுகள் தேவை - மாருதி சுசுகி சேர்மன் பார்கவா தகவல் !

By Raghupati RFirst Published Dec 21, 2022, 7:21 PM IST
Highlights

சீனாவின் கார் மார்க்கெட்டை சமன் செய்ய இன்னும் 140 ஆண்டுகள் தேவை என்று கூறியுள்ளார் மாருதி சுசுகி சேர்மன் ஆர்.சி.பார்கவா.

மாருதி சுசுகி சேர்மன் ஆர்.சி.பார்கவா கடந்த திங்கள்கிழமை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  மக்கள்தொகைக்கு ஏற்ப கார்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சீனாவின் கார் மார்க்கெட்டை சமன் செய்ய இன்னும் 140 ஆண்டுகள் தேவை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கையானது சராசரிக்கும் குறைந்தது. கொரோனா கால பொது முடக்கம், ஆலைகள் மூடப்பட்டது என பல காரணங்கள் உள்ளது. கார் தொழில்துறையின் மந்தமான வளர்ச்சிக்கு இன்னும் சில காரணங்களும் இருக்கிறது. அவை அதிக வரிவிதிப்பு மற்றும் சிறிய கார்களுக்கு ஆகும் அதிக செலவு என பல உள்ளது. தற்போது இந்தியாவில் 1,000 மக்களுக்கு 30 கார்கள் உள்ளது.

இதையும் படிங்க..டிசம்பர் 24 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதே சீனாவில் 1,000 மக்களுக்கு 221 கார்கள் உள்ளது என்று சுட்டிக்காட்டினார் ஆர்.சி.பார்கவா. இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், சுமார் 140 ஆண்டுகள் எடுக்கும். இந்திய கார் மார்க்கெட் தேவையான அளவு வேகமாக வளரவில்லை. 2000 - 2010 கால கட்டத்தில், பயணிகள் கார் சந்தை ஆண்டுக்கு 10 - 12 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், சராசரி வளர்ச்சி வெறும் 3 - 4 சதவீதமாக குறைந்துவிட்டது.

ஜெர்மனி போன்ற பிற வளர்ந்த நாடுகளைப் போலல்லாமல், தங்கள் வாகனத் தொழிலின் வலிமையின் அடிப்படையில் தங்கள் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொள்கிறது இந்தியா. கார்களை ஆடம்பரத்தின் தயாரிப்பு என்று நிராகரித்து வருகிறது. கார் வாங்குவது வருமானத்துடன் தொடர்புடையது அல்ல. ஜப்பானில் கார்கள் மீதான வரி 10 சதவீதமாக உள்ளது.

ஐரோப்பாவில், 19 சதவீதம் தான். இந்தியாவில் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களுக்கான வரி 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உள்ளது.  தற்போது, நான்கு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. வாகன வகையைப் பொறுத்து கூடுதல் செஸ் 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இருக்கும்.

இதையும் படிங்க..உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

உதாரணமாக, 2018-19ல் 25.8 சதவீதமாக இருந்த ரூ.5 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான காரின் சந்தைப் பங்கு 2021-22ல் 10.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் ரூ.7 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான கார்களின் சந்தை 60 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக சரிந்தது.

என்னுடைய கருத்தை தொழில்துறையில் உள்ள பலர் ஏற்கவில்லை. ஆனால் உலகில் உள்ள எந்த நாட்டையும் ஒப்பிடும் போது நமது உற்பத்திச் செலவு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள கார் நிறுவனங்கள் இந்த சந்தைகளுக்குள் நுழைந்து ஏற்றுமதியை அதிகரிக்க நாம் தீவிர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

பாதுகாப்பு விஷயத்தில், பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பது போதாது என்று பார்கவா சுட்டிக்காட்டினார். ஓட்டுநர்களுக்கான பயிற்சியின்மை மற்றும் லைசென்ஸ்கள் எளிதாக வாங்கப்படுவது ஆகியவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க..லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?

click me!