2022ம் ஆண்டில் விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 எம்பிவி கார்கள்.. எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

By Raghupati R  |  First Published Dec 18, 2022, 6:28 PM IST

2022ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 எம்பிவி கார்களை பற்றி இங்கு பார்க்கலாம்.


சமீப ஆண்டுகளில் இந்திய சந்தையில் எஸ்யூவிக்கள் மற்றும் எம்பிவிக்கள் பெரும் புகழ் பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் ஆறு முதல் ஏழு பயணிகளை வசதியாக ஏற்றிச் செல்லும் திறன் காரணமாக  எம்பிக்களை அதிக பேர் வாங்கி வருகிறார்கள். வருடந்தோறும் வரும் புதிய கார்களை அதிகளவில் வாங்கி ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், 2022ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 எம்பிவி கார்களை பற்றி இங்கு காண்போம்.

Tap to resize

Latest Videos

மாருதி சுசுகி எர்டிகா :

மாருதி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ஆகும். 2022 ஆம் ஆண்டில் 1,21,541 யூனிட்கள் விற்கப்பட்டதால், எர்டிகா விற்பனையில் முன்னணியில் உள்ளது. இது 5 ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்ட 99 bhp 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இருக்கும் இது, எர்டிகா ரூ.8.35 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் வரை விற்பனையாகிறது.

கியா கேரன்ஸ் : 

கியா கேரன்ஸ் (Kia Carens) இன்னோவாவை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான இரண்டாவது எம்பிவி ஆனது. இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த எம்பிவியின் 59,561 யூனிட்கள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் போன்ற வசதிகளுடன் வரும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விற்பனையாகிறது.

இதையும் படிங்க..அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

டொயோட்டா இன்னோவா :

டொயோட்டா இன்னோவா (toyota innova) எம்பிவி அனைவரின் விருப்ப பட்டியலில் இப்போதும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவில் இந்த எம்பிவியின் 56,533 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி XL6 :

மாருதி சுசுகி எர்டிகா (maruti suzuki xl6) இந்தியாவில் மிகவும் பிரபலமான  எம்பிவியாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை 35,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. இது எர்டிகாவைப் போன்று 5-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்ட அதே 99 bhp 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. எக்ஸ்எல்6 தற்போது ரூ.11.29 லட்சம் முதல் ரூ.14.55 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெனால்ட் ட்ரைபர் : 

இறுதியாக, இந்த பட்டியலில் உள்ளது கடைசி எம்பிவி, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) இருக்கிறது. மிகவும் மலிவு விலையில் உள்ளது இதன் ப்ளஸ் பாயிண்ட் ஆகும். 2022 ஆம் ஆண்டில், இதுவரை 31,751 டிரைபர் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 71 bhp 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.92 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..2024 டார்கெட்! ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்.. அப்போ திமுக + காங்கிரஸ் + மநீம கூட்டணி கன்ஃபார்ம்!

click me!