உங்கள் தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைக்க வேண்டுமா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..

By Ramya s  |  First Published Aug 28, 2023, 11:33 AM IST

தொழிலுக்கு சரியான பெயர் இல்லாததே அதற்கு காரணம் என்று எண்கணிதம் கூறுகிறது.


இந்த காலக்கட்டத்தில் பலர் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால் சொந்த தொழில் அனைவருக்கும் லாபம் கொடுக்கிறதா என்பது சந்தேகம் தான். சிலர் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மற்றவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தொழிலுக்கு சரியான பெயர் இல்லாததே அதற்கு காரணம் என்று எண்கணிதம் கூறுகிறது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது கூட, பிறந்த நேரத்தை வைத்து ராசி நட்சத்திரத்தை பார்த்து பெயர் வைப்போம். ஆனால் தொழிலை பொறுத்த வரை, அந்த தொழிலின் சம்ம்பந்தப்பட்ட கிரகத்தின் சேர்க்கை எண்ணில் பெயரிடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே எந்த தொழிலுக்கு எந்த சேர்க்கை எண்ணில் பெயரிடலாம் என்று விரிவாக பார்க்கலாம்..

Tap to resize

Latest Videos

அரசு ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலுக்கு சூரியனின் ஆதிக்கத்திற்கு உரிய கூட்டு எண்ணான 1ல் முடியும் படி பெயரிட வேண்டும்.  போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரிய கூட்டு எண்ணை வரும் இரண்டு வரிசையில் பெயர் வைக்கலாம். பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், நிர்வாகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் குருவின் ஆதிக்கத்திற்கு உரிய எண்ணான மூன்றில் தங்கள் பெயரை வைக்க வேண்டும்.

இந்த அபூர்வ மச்சம் இருந்தால், அவர் கோடீஸ்வரர்! நவகிரக மச்சங்களும் அவற்றின் பலன்களும்..

பெட்ரோல் பங்க் நடத்துபவர்கள், வாசனை திரவியம், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் ராகுவின் ஆட்சி எண் 4-ல் பெயர் வைக்கலாம். கல்வி தொடர்பான தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழில்கள் புதனின் ஆதிக்க எண்ணான 5-ல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

திரையரங்குகள், பாத்திரக்கடைகள், அழகு நிலையங்களின் உரிமையாளர்கள் சுக்கிரனின் ஆட்சி எண்ணான 6-ல் தங்கள் தொழிலின் பெயரை குறிப்பிட வேண்டும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர், எலக்ட்ரானிக், மருந்தக உரிமையாளர்கள் கேதுவின் ஆளுகைக்குட்பட்ட 7 என்ற எண்ணில் பெயரை வைக்க வேண்டும். இரும்புத் தொழிலில் வேலை செய்பவர்கள், புத்தகக் கடைகள் வைத்திருப்பவர்கள், பழைய கடைகளை வைத்திருப்பவர்கள் சனியின் ஆட்சி எண் எட்டில் இருக்க வேண்டும்.

சமையல் துறையில் உள்ளவர்கள், மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி வைத்திருப்பவர்கள் தங்கள் பெயரை செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் எண்ணான வைக்க வேண்டும். எனவே நீங்கள் செய்யும் தொழிலுக்கு அந்தந்த கிரகத்தின் ஆட்சி எண்ணைக் கொண்ட பெயர்களை கூட்டு எண்ணாக வைப்பதன் மூலம் நவகிரகங்களின் அருள் கிடைக்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பன்மடங்கு லாபம் கிடைக்கும். 

click me!