vastu tips தொழிலில் ஓஹோன்னு வரணுமா? இந்த 6 டிப்ஸ் பின்பற்றி பாருங்க

 நம்முடைய வாழ்க்கை முறையில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் மட்டுமின்றி, அலுவலகம் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சாஸ்திரத்தை முறையாக பயன்படுத்தினால் வாழ்வில் அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.
 

top 6 essential vastu tips for a successful business

வியாபாரம் வளரணும் என்று யாரும் நினைப்பது கிடையாது. மகிழ்ச்சியாக, நம்பிக்கையுடன் தான் ஒவ்வொருவரும் தொழில் அல்லத வியாபாரத்தை துவங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு இந்த முயற்சிக்கு அனைத்தும் வீணாகி, வளர்ச்சி என்பது இல்லாமல் பாதியிலேயே அனைத்தும் தடைபட்டு, முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு  உடனடியாக செய்யக்கூடிய, சின்ன சின்ன வாஸ்து மாற்றங்கள் செய்தால் வியாபார இடத்தில் சக்தியை ஈர்க்கும் தன்மை ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நம்ம வீடு போல இல்லாமல், வியாபார இடம் என்பது பலரும் வந்து செல்லும் இடமாகும்.  அதனால் இதை மனிதர்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாற்றி அமைப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

தொழில் வளர கடைபிடிக்க வேண்டிய வாஸ்து டிப்ஸ் : 

Latest Videos

1. நுழைவு வாசல் :

வாஸ்து ரீதியாக வடகிழக்கு (North-East) அல்லது கிழக்கு (East) பார்த்த வாசல் மிகவும் நன்மை தரும். இது வளத்தையும், கச்சிதத்தையும் ஏற்படுத்தும். திசை தவறி நுழைவு வாசல் இருந்தால், வாசலில் சாமி படம் வைத்தோ அல்லது அனுமான், சிங்கம் போன்ற சக்தி உருவங்களை வைத்து சக்தி மையமாக்கலாம்.

2. முதலாளியின் இருக்கை :

முதன்மை இருக்கை எப்போதும் தெற்கு மேற்கு (South-West) பகுதியில் இருக்க வேண்டும். உங்கள் முகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். பின்னால் வழி கொடுக்கும் வகையில் இருக்கக்கூடாது. சுவர் இருப்பது நல்லது. சுவர், நம்பிக்கையை தரும்.

மேலும் படிக்க: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி

3. பணப் பெட்டி (Cash Box) :

காசு வைக்கும் அலமாரி அல்லது பெட்டி தெற்கே பார்த்து வைத்து, வடக்கு நோக்கி திறக்க வேண்டும். வாஸ்துவில் வடக்கு திசை குபேர திசை. அதனால், பணம் வரவுக்கு திறந்திருக்க வேண்டும்.  பூஜைச் செய்யும் இடத்தில் குபேரனுக்கு சிறிய பூஜை செய்து அதன் மீது பணப் பெட்டியை மேலே வைக்க வேண்டும்.

4. இடம் சுத்தம் :

வியாபார இடம் எப்போதும் தூய்மை, ஒழுங்கு கொண்டதாக இருக்க வேண்டும்.  புழுதி, குப்பை, பழைய பொருட்கள், சும்மா இருக்கும் இடங்கள் போன்று இருக்கக் கூடாது. இது சக்தியை தடை செய்யக் கூடியவை ஆகும்.  ஒவ்வொரு வாரமும் நீர், மஞ்சள், ஏலக்காய் தூள் கலந்து தண்ணீர் தெளித்தால் தெளித்து வந்தால் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கொண்டதாக இருக்கும்.

5. தாவரங்கள் :

மூலையில் திருநீறு அல்லது பச்சை துளசி செடி வைக்கவும். இது மனசுக்கும், ஈர்ப்பு சக்திக்கும் உதவும். வாஸ்துவில் money plant, வேம்பு, அரளி, ஆகியவை சக்தியை ஈர்க்க நல்லது. பசுமையான செடிகள் இல்லாத இடங்களில் வளர்ச்சி இருக்காது. அதேபோல், தாவரங்கள் இல்லாத வியாபாரமும் வேகம் இல்லாமல் நகரும்.

மேலும் படிக்க: கெட்ட கனவு கண்டால் கெட்டது நடக்குமா ? தடுக்க என்ன பண்ணலாம்?

6. கண்ணாடி :

கணிசமான அளவிலான கண்ணாடி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும், உங்கள் நம்பிக்கையையும் இரட்டிப்பாக்கும். ஆனால், கண்ணாடி நேராக வாசலை எதிர்நோக்கக்கூடாது. அதுவே வெளிச்சத்தையும் வாஸ்துவையும் வெளியே தள்ளிவிடும். சிறிய ஆடம்பர ஒளி, கண்ணாடி இணைப்பு, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

வியாபாரம் என்பது நம்ம உழைப்போடு கூட நம்ம இடம், சூழல், அதில் ஒளியும் வழியும் என்ன சொல்லுது என்பதையும் பொறுத்தது. வாஸ்து என்பது ஜோதிடம் இல்லை. இது வாழ்க்கை முறையை சீராக்கி, நேர்மறை ஆற்றல்களை பெற்று, வாழ்க்கையில் அளவில்லாத நன்மைகளை பெற வழிகாட்டுவதாகும்.

vuukle one pixel image
click me!