பங்குனி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், வழிபாடுகள் மற்றும் விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Panguni Month Specials 2025 : இன்று பங்குனி முதல் நாள் ஆகும். தமிழ் மாதங்களில் மங்களகரமான மாதமாக இது போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் தான் பல தெய்வங்கள் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விரதமிருந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தின் கடைசி மாதம் பங்குனி என்பதால் இந்த மாதத்திற்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. அந்தவகையில் இன்று 2025 ஆம் ஆண்டின் பங்குனி மாதம் மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பங்குனி மாதம் உள்ளது. பங்குனி மாதம் தெய்வீக திருமணங்கள் யாவும் நடைபெற்ற மாதம் என்பதால் இந்த மாதம் தெய்வீக அருள் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது .அந்த வகையில் இந்த 2025 ஆண்டு பங்குனி மாதத்தில் என்னென்ன முக்கிய விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள் வருகிறது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2025 : இந்த விளக்கை ஏற்றினால் நீங்க நினைச்சது அப்படியே நடக்கும்
பங்குனி மாதம் 2025 முக்கிய விசேஷங்கள்:
மார்ச் 30 (ஞாயிறு) - பங்குனி 16 - தெலுங்கு வருட பிறப்பு
மார்ச் 31 (திங்கள்) - பங்குனி 17 - ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் 6 (ஞாயிறு) - பங்குனி 23 - ஸ்ரீ ராம நவமி
ஏப்ரல் 10 (வியாழன்) - பங்குனி 27 - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 11 (வெள்ளி) - பங்குனி 28 - பங்குனி உத்திரம்
இதையும் படிங்க: காரடையான் நோன்பு 2025: மாங்கல்யம் பலம் அதிகரிக்க மனதார 'இப்படி' வழிபடுங்க!
பங்குனி மாதம் 2025 விரத நாட்கள்:
மார்ச் 29 (சனி) - பங்குனி 15 - அமாவாசை
ஏப்ரல் 12 (சனி) - பங்குனி 29 - பௌர்ணமி
ஏப்ரல் 1 (செவ்வாய்) - பங்குனி 18 - கிருத்திகை
மார்ச் 25 (செவ்வாய்) - பங்குனி 11 - திருவோணம்
மார்ச் 25, ஏப்ரல் 8 (செவ்வாய்) பங்குனி 11, பங்குனி 25 - ஏகதாசி
மார்ச் 20, ஏப்ரல் 3 (வியாழன்) - பங்குனி 6, பங்குனி 20 - சஷ்டி
மார்ச் 17 (திங்கள்) - பங்குனி 3 - சங்கடஹர சதுர்த்தி
மார்ச் 27 (வியாழன்) - பங்குனி 13 - சிவராத்திரி
மார்ச் 27, ஏப்ரல் 10 (வியாழன்) - பங்குனி 13, பங்குனி 27 - பிரதோஷம்
ஏப்ரல் 1 (செவ்வாய்) - பங்குனி 18 - சதுர்த்தி
பங்குனி மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள்:
மார்ச் 16 (ஞாயிறு) - பங்குனி 2 - தேய்பிறை முகூர்த்தம்
மார்ச் 17 (திங்கள்) - பங்குனி 3 - தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 4 (வெள்ளி) - பங்குனி 21 - வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 7 (திங்கள்) - பங்குனி 24 - வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 9 (புதன்) - பங்குனி 26 - வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 11 (வெள்ளி) - பங்குனி 28 - வளர்பிறை முகூர்த்தம்
பங்குனி மாதம் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்:
மார்ச் 22, ஏப்ரல் 5 (சனி) - பங்குனி 8, பங்குனி 22 - அஷ்டமி
மார்ச் 23, ஏப்ரல் 6 (ஞாயிறு) - பங்குனி 9, பங்குனி 23 - நவமி
மார்ச் 20, 29 மற்றும் ஏப்ரல் 2 (வியாழன் சனி மற்றும் புதன்) - பங்குனி 6, 16 மற்றும் 19 - கரி நாட்கள்.