செப்டம்பர் மாத ராசி பலன் : எந்த ராசிகளுக்கு ஜாக்பாட்? கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எவை?

By Ramya s  |  First Published Aug 28, 2023, 1:01 PM IST

செப்டம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


செப்டம்பர் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் உள்ளிட்ட கிரகங்கள் மாற்றங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, மேஷத்தில் குரு, ராகு, கடகத்தில் சுக்கிரன், சிம்ம ராசியில் சூரியன் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என பயணம் செய்கின்றன. எனவே செப்டம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் :

Tap to resize

Latest Videos

உங்கள் ராசியில் ராகு உடன் குருபகவான பயணம் செய்கிறார். வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். புதிய சொத்துக்கள், பெண்கள், நகைகள் ஆபரணங்கள் வாங்கலாம். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும், இந்த மாத பிரச்சனை தீர வாய்ப்புள்ளது. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கிய கைகூடி வரும்.

ரிஷபம் 

சனி 10-ம் வீட்டில் வக்கிரமடைவதால் பணம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் கவனம் தேவை. பெரிய அளவில் தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பங்குச்சந்தை, பிட்காயின் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்தால் கடும் இழப்பு நேரலாம். இந்த மாதம் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதன் வக்கிரமடைந்தாலும் கவலை வேண்டாம். நினைத்த காரியம் கைக்கூடும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கலாம். பெண்கள் வண்டி, வாகனம் வாங்கலாம். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்களின் உயர்கல்விக்கு ஏற்ற மாதம். பிடித்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.

மிதுனம்

சனி 9-ம் வீட்டில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களை தருவார். வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைகளை தகர்த்து முன்னேறும் காலம். தொழில் ரீதியாக செய்யும் முதலீடுகள் சிறப்பாக இருக்கும். திடீர் பணவரவு இருக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். 

கடகம்

புதிய வேலைக்கு முயற்சி செய்வோருக்கு சாதகமான மாதம். கூட்டுத்தொழில் செய்வோருக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தின் ஆதரவுடன் திருமணம் கைக்கூடி வரும். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க சிறப்பான நேரம். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல்நிலை சீராக இருக்கும் என்றாலும் அஜீரணம், குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை.

சிம்மம் :

இந்த மாதம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கைக்கூடும். தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு, பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைக்கூடி வந்துள்ளதால் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.

கன்னி

செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடக்கப் போகிறது. வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். அதே வேலையிலேயே தொடருங்கள். புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைகளை தாண்டி முன்னேற்றம் கிடைக்கும். புத்திய பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான மாதம். புதிய முயற்சிகளை யோசித்து செய்வது நல்லது.

துலாம் :

மனக்குழப்பங்கள் அவ்வப்போது வந்த் நீங்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் பொறுமையும் நிதானமும் தேவை. குடும்பத்தில் விவாதம் நடக்கும். வண்டி வாங்க முயற்சி செய்தால், மனைவியின் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் : 

புதிய வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் வருமானம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். காதலிப்போருக்கு உறவினர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும். அரசு தேர்வு எழுதுவோருக்கு இது சாதகமான மாதம். பெண்களுக்கு நகை, ஆடை, ஆபரணங்கள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நினைத்த காரிய கைகூடும்.

உங்கள் தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைக்க வேண்டுமா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..

தனசு :

நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். இல்லத்தரசிகளுக்கு நிதானம் தேவை. சமையலறை, வேலை செய்யும் இடத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

மகரம் : 

சொத்து சேர்க்கை ஏற்படும். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு தைரியத்தை அதிகரித்து கொள்வீர்கள். மனதில், நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நேரம் இது. குடும்பத்தில் திடீர் தேவை ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அம்மாவின் உடல்நிலையில் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்கலாம். பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

வண்டி, வாகங்களில் கவனம் தேவை, குடும்பத்தில் அவ்வபோது பல பிரச்சனைகள் ஏற்படும்.கோபத்தை தவிர்ப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. யாருக்கும் கடன் வாங்கி தர வேண்டாம். புதிய தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். புதிய வண்டி, வாகனம் தவிர்ப்பதை தடுக்க வேண்டும். மாணவர்கள் வெளியூருக்கு சென்று படிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய மாதம்.

மீனம் :

மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்கும். உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று  படிக்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும், புதிய தொழில் முயற்சிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம். பெற்றோரின் ஆசியுடன் திருமணம் கைகூடும். இல்லத்தரசிகளுக்கு பொறுப்புகள் அதிகமாகலாம். 

click me!