Sani Peyarchi Palan 2024: வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்; வாரி சுருட்டப்போகும் ராசிக்காரர்கள்

By Dhanalakshmi G  |  First Published Jul 24, 2024, 12:48 PM IST

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் ஐப்பசி மாதம் 29ஆம் தேதி அதாவது நவம்பர் 15ஆம் தேதியன்று முடிவுக்கு வரப்போகிறது. 


ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி என்று மனித வாழ்க்கையில் சனி பகவான் 15 ஆண்டு காலம் பாடாய் படுத்தி விடுகிறார். சனிபகவான் ராசி மண்டலத்தை சுற்றி வருவதற்கு 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். இதைத்தான் 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்களும் இல்லை 30 ஆண்டு காலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்று கூறப்படுவது உண்டு. 

சனியால் யாருக்கு பாதிப்பு வராது:
நல்லது செயல்கள் செய்பவர்கள், நல்ல மனம் கொண்டவர்களை சனிபகவான் எதுவும் செய்ய மாட்டார். காகங்களுக்கு சாதம் வைப்பவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடன்களை தவறாது செய்பவர்களையும் எதுவும் செய்ய மாட்டார். அதேபோல், சிவ பூஜை செய்பவர்கள், அனுமனை வணங்குபவர்கள், பைரவ பூஜை செய்பவர்களுக்கு சனியால் பாதிப்பு வராது என்று கூறுவது உண்டு. 

குரு பெயர்ச்சி பலன் 2024: கோடி நன்மை தரப்போகும் குரு பார்வை; தொட்டதெல்லாம் பொன்னாகும்!

தீயவர்களுக்கு படிப்பினை தரும் சனி:
தீய எண்ணம் கொண்டவர்களின் தலையில் தட்டி அமரவைப்பார் சனிபகவான். குப்பைகள் நிறைந்த இடம், தலைவிரி கோலமாக இருப்பவர்கள். அசுத்தமானவர்கள், இருள் சூழ்ந்த இடம், கெட்ட வார்த்தைகள் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிபகவான் பிடித்துக்கொள்வார்.  மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிப்பார் சனிபகவான். மாற்றான் மனைவியை அபகரிக்க நினைப்பவர்களை சனி கடுமையாக தண்டிப்பார்.

சனி வக்ர நிவர்த்தி:
சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஜூன் 29ஆம் தேதி முதல் வக்ர நிலைக்கு சென்ற சனிபகவான் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரைக்கும் மெதுவாக பயணம் செய்வார். பின்னர் நேர்கதிக்கு ம் சனி பகவான், சனியின் வக்ர முடிவினால் இதுவரை பாதிப்பு நிலையில் இருந்த சில ராசிக்காரர்களுக்கு மீண்டும் நல்லது செய்வார். .

மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு என்னவாகும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். இதுவரை சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தீபாவளிக்குப் பிறகு விலகும். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். சொத்து வாங்குவீர்கள். சொந்த பந்தங்களுடன் பகை விலகும்.  

Tap to resize

Latest Videos

புதன் பெயர்ச்சி பலன் 2024: சிம்ம ராசிக்கு இடம் மாறும் புதன்; ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட் யாருக்கு?

விருச்சிக ராசி கவனம் தேவை:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனி. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைவேண்டும். கடக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக, நிதானத்துடன் இருக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் கண்டச்சனி காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. புதிய வேலைகளில் நன்கு விசாரித்து சேரவும். அதே போல மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி முழு வேகத்துடன் செயல்படும். நிதானம் தேவை. 

click me!