
சனி பெயர்ச்சி 2025:
நவகிரகங்களில் சனிபகவான் என்றால் அனைவருக்கும் பயம்தான். அவர் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது.
ஏழரை சனி யாருக்கு:
2025ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். சனியின் பிடியில் சிக்கியிருந்த மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. குரு பகவானின் வீடான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமரப்போகும் சனி பகவான் அமருகிறார். மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியையும், 10ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்வையிடுகிறார். கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான்.
மேஷம்:
2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. எந்த வேலையை தொடங்கும் போதும் இருமுறை யோசித்து முதலீடு செய்ய வேண்டும். இதுநாள் வரை லாப சனியாக இருந்த நிலை மாறி 2025ஆம் ஆண்டு முதல் விரைய சனியாக மாறுகிறார். சுப விரையத்திற்கு செலவு செய்து பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. பொறுமை, நிதானம் தேவை. சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களை காப்பாற்றுவார். விரைய பாதிப்புகள் குறைய திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார். குடும்பத்துடன் தரிசனம் செய்து நலன் பெறவும்.
சந்திர தோஷம்; தண்ணியில கண்டமா? மனக்குழப்பம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?
மகரம்:
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்ட வந்த உங்களுக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சங்கடங்கள் தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களை கொடுப்பார். புதிய வேலை கிடைத்து வருமானம் பெருகும். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேரும். பணப்பற்றாக்குறை தீரும்.தொழிலில் வளர்ச்சி ஏற்படும். கொடுத்து ஏமாந்தவர்களுக்கு பணம் வீடு தேடி வரும். திருநாள்ளாறு நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானுக்கு நன்றி சொல்லவும்.
கும்பம்:
2025ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜென்ம சனி விலகப்போகிறது. பாதசனி என்பதால் இரண்டரை வருடத்தை கடந்து விடலாம். சங்கடங்கள் தீர வாலாஜாபேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலம். மன உளைச்சல் அதிகரித்து, பயணங்களில் எச்சரிக்கை தேவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ராசியில் அமரும் சனி பகவானால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.