ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வீண் மனக்கவலைகள் நீங்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் மகழ்ச்சியும், குதூகலமும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்ப்டுவது நல்லது. எந்த கடினமான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளிக்க வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் நீங்குவதுடன், நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். உங்களுக்கு பிரியமான நபர்களை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். எந்த முயற்சியிலும் சாதக பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மை பயக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படலாம். எனினும் தடை தாண்டி முன்னேற வேண்டும் என்று முயற்சிப்பீர்கள். உடல் நலனைப் பொறுத்தவரை உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுதங்களை கையாளும் போது, வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வீண் செலவு ஏற்படும், எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் திறமை ஏற்படும். இனிமையான பேச்சு, சாதூர்யம் ஆகியவற்றால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க நேரிடும்.
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். வாழ்க்கையில் முன்னேற்றமும், சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்கும்.