ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகளையே வழங்கும். காரிய தடைகள் இருந்தாலும், பணவரத்து அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான நிலை ஏற்படும். தொழில் நிமித்தமாக பயணக்கள் செல்ல வேண்டியிருக்கும். புதிய ஆர்டர் கிடைப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தங்கள் திறமையான பேச்சால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பீர்கள். இதனால் அவர்களுடன் பகை ஏற்படலாம். எனினும் பணவரத்து திருப்தி தரும் வகையில் இருக்கும்.
பெண்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயலால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை குறைப்பது நல்லது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலனை பொறுத்தவரை நீர் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். இந்த பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள் சம்மந்தமான காரிய அனுகூலம் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. எனினும் இந்த பெயர்ச்சியால் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தேவையான திறமை இருக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாகும்.
பரிகாரம் :
அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.