இந்த 3 ராசிகளுக்கு திடீர் ஜாக்பாட்.. இனி தொட்டதெல்லாம் வெற்றி.. உங்க காட்டில் பணமழை தான்..

By Ramya s  |  First Published Oct 17, 2023, 11:18 AM IST

94 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சமசப்த யோகமாகும். எனவே இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு சாதக பலன்கள் கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் இந்த கிரக சேர்க்கைகளால் சுப யோகங்கள் மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மேஷம் தொடங்கி மீனம் வரை 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் அக்டோபர் 18 முதல் சம சப்த யோகங்கள் உருவாக உள்ளன.  சனி-சுக்கிரன் மற்றும் குரு- ராகு நேருக்கு நேர் பயணிப்பதால் 2 சம சப்த யோகங்கள் உருவாக உள்ளன. இது 94 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சமசப்த யோகமாகும். எனவே இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு சாதக பலன்கள் கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சனி-சுக்கிரன் மற்றும் குரு ராகு நேருக்கு நேர் வரும்போது சமசப்தக் யோகம் உருவாகி உள்ளதால் 3 ராசிகளுக்கு திடீர் பணவரவும், அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகிறது. 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ரிஷபம் : 

இந்த இரட்டை சமசப்தம யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கப்போகிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஊழியர்களுக்கும் பணியிடத்தில் நல்ல பெயர் இருக்கும். இந்த நேரம் பணியிடத்தில் பெயர் எடுப்பதாக இருக்கும். மொத்தத்தில் இந்த காலக்கட்டம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
திடீர் பண ஆதாயம், அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால், இந்த நேரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது?

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து பண ஆதாயம் உண்டாகும். மேலும் நீண்ட காலமாக வெளிநாடு செல்ல முயற்சித்திருந்தால், தற்போது அதற்கு பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியில் திரிகிரஹி யோகமும் உருவாகும் என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிகச்சிறப்பான காலக்கட்டமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதை தொடங்கினாலும், அதில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பான எந்தப் பயணமும் நல்ல பலன்களைத் தரும்.
உங்கள் தைரியமும் துணிச்சலும் உச்சத்தில் இருக்கும். தொழிலில் புதிய உயரங்களை அடைய வேண்டிய நேரம் இது. உங்கள் எதிரிகளை எளிதாக வீழ்த்திவிடுவீர்கள்.

click me!