ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மிதுன ராசியை பொறுத்தவரை, ராகு பகவான் லாப் ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் பஞ்சம் ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எனினு வீண் அலைச்சல் ஏற்படலாம். பயணங்கள் வீண் செலவு உண்டாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நிதானமாக பேசுவது நல்லது. கணவன் மனைவி ஒருவொருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. இல்லையெனில் குடும்பத்தில் அமைதி குறையலாம். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பதும் அவசியம்.
தொழில் வியாபாரத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். பணியிடத்தில் கவனமாக வேலை செய்வது நல்லது. மேலதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகளை செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது. கலை துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அரசியலில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். மாணவர்களை பொறுத்தவரை கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை ரத்தம் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். எனினும் நடைபயிற்சி செய்வது நன்மை தரும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியில் வெளிநபர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அடுத்தவர்களின் பேச்சை கேட்காமல் சுயமாக முடிவெடுப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023.. மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
பரிகாரம் :
புதன் கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.,