ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ராகு மற்றும் கேது இரண்டும் ஜோதிடத்தில் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த கிரகங்கள், ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சிகள் ஏற்படும் போது அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல வகைகளிலும் நன்மை அளிப்பதாகவே உள்ளது. இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பயணங்கள் மகிழ்ச்சி தரும், தெய்வ பக்தி அதிகரிக்கும். எனினும் தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்படலாம். பணவரத்தில் தாமதம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். எனினும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பணி சிறப்பாக இருக்கும்.
துளசி செடியை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க.. பெரும் நிதி இழப்பு ஏற்படுமாம்..
கலைத்துறையினருக்கு மன ரீதியில் தெளிவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசியலில் இருப்போருக்கு இடமாற்றம், பதவி இறக்கம் இருக்கும். இருப்பினர் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி செலவு அதிகரிக்கும், கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது. வீண் வாதங்களால் பிரச்சனை ஏற்படலாம். எனவே கவனமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. எனினும் முன் கோபத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்கினால், பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.