ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள், ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சிகள் ஏற்படும் போது அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
லாப ஸ்தானத்திற்கு மாறும் ராகுவால் காரிய தடைகள் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விரிவாக்கம் செய்வீர்கள்.
பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எனினும் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். திறமையான பேச்சின் மூலம் பெண்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி, உற்சாகம் உண்டாகும். கலை துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023.. மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
அரசியலில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. மேலிடத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். எனவே கவனம் தேவை. மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று முழு முயற்சியுடன் படிப்பார்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை மருத்துவ செலவுகள் குறையும். எந்த விஷயத்திலும் சாதக பலன்களை பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் பக்குவமாக பேசுவதால் நன்மை கிடைக்கும்.
பரிகாரம் : அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மல்லிகை பூ மாலை கட்டி கொடுத்து, அர்ச்சனை செய்து வணங்கவும்.