ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் பயணத்தில் தடை ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களில் இழுபறி நீடிக்கலாம். எந்த ஒரு காரியத்திலும் தடை ஏற்படும். கடின முயற்சிக்கு பிறகே, ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும். எனினும் எதிர்பார்த்த பணம் வருவதில் சிக்கல் இருக்காது. குடும்பத்திலும் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் படிப்படியாக மறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் சற்று அதிகமாக உழைக்க வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் அல்லது பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தேடியவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதத்தை தவிர்த்து, மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் நன்மை பயக்கும்.
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பெண்களுக்கு நன்மை ஏற்படலாம். கலைத்துறையினர் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். அரசியலில் இருப்பவர்கள்,மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். அடுத்தவர்களிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. எதையும் பொறுமையாக சிந்தித்து செய்தால் வெற்றி கிடைக்கும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.
பரிகாரம் : அருகில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.