ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சொன்ன சொல்லை எப்படியாவது காப்பாற்றுவீர்கள்.. ஆனாலும் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. இந்த காலக்கட்டத்தில் உங்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த தொய்வு நீங்கி, லாபம் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உங்களின் தொழில் முயற்சிகளில் சாதகமான பலன்களே கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்கள் திறமை வெளிப்படும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். வேலை தேடுவோருக்கு புதிய வேலை தேடி வரும். கூடுதல் பணி காரனமாக உடல் சோர்வு ஏற்படலாம். சக ஊழியர்களுடன் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் நீங்கும். பிள்ளைகள் கல்வி மற்றும் மற்ற வகையில் சிறந்து விளங்குவார்கள் பெண்கள் திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பார்கள். கலைத்துறையினர் தங்கள் வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படலாம். காரியங்கள் தாமதமாக நடந்தாலும், வெற்றிகரமாக முடியும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை காய்ச்சல், தலைவலி ஏற்படும். கவனம் தேவை.
நீண்ட தூர பயணங்களால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும், தொழிலில் இருந்த போட்டிகள் குரையும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கி குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உள்ள அன்பு அதிகரிக்கும்.
பரிகாரம் : சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதால், கஷ்டங்களை போக்குவதுடன் மன நிம்மதி தரும்.