ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

By Ramya s  |  First Published Oct 18, 2023, 11:11 AM IST

ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.


2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் அகலும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற சிக்கல்கள் வரலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொழிலில் உங்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எனினும் சக ஊழியர்களுடன் சாமர்த்திய பேச்சு காரணமாக அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எதையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் தேவை. எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் கிடைக்கும். ஆனாலும் பேசும் போது எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது கவனம் தேவை.. உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

எனினும் இந்த பெயர்ச்சியால் வீடு, மனை, நிலம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அவ்வபோது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள், ஆனால் அதற்கு கூடுதல் முயற்சி தேவை.

பரிகாரம் : துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும், தைரியம் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும் வகையில் இருக்கும்.

click me!