ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் மனதில் உறுதி பிறக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதக பலன்கள் கிடைக்கும். எனினும் வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும். இதனால் வீட்டில் நிம்மதியே இருக்காது. கணவன் – மனைவி இடையே ஒற்றுமை இருக்காது. மனம் நோகும் படியான சூழல் ஏற்படும். வீடு, வாகனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொழில், வியாபாரத்திலும் சிக்கல் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வியாபாரம் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற நேரிடும். பொறுப்புடன் பணி செய்வது நல்லது. கூடுதல் பொறுப்பால் சுமை ஏற்படலாம். அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
பெண்களை பொறுத்தவரை எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீண் கவலை ஏற்படலாம். ஒப்பந்தங்களில் கைஎழுத்திடும் முன்பு நன்கு யோசித்து செயல்படவும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
அரசியலில் இருப்பவர்களுக்கு பிறரால் மனக்கஷ்டம் ஏற்படலாம். மற்றவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
இந்த பெயர்ச்சியால் ஏற்கனவே செய்த செயலுக்கு வருந்துவீர்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. மனதில் ஒருவித கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் சிலர் வலிய வந்து சண்டை போடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது..
பரிகாரம் : தினமும் குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.