துலாம் ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத துலாம் ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமையப்போகிறது. சனிபகவான் உங்களின் ஏழாவது, பதினொன்று, இரண்டாம் வீடுகளின் மீது முழுமையான பார்வையை வைத்துக்கொண்டு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து துலாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். எனவே இந்த ஆண்டு உங்களுக்கு நிதி ரீதியாக வெற்றியைத் தரும்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் கூடும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். எனினும் தொழில் அல்லது வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படலாம். எந்தத் தடைகளையும் எதிர்கொள்ள நீங்கள் பயப்பட மாட்டீர்கள், மேலும் உங்களின் இந்த குணம் உங்கள் வேலையில் வெற்றியைத் தரும். உங்களுக்கு எந்த வேலை கிடைத்தாலும், அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். எனவே பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த ஆண்டு நிதி ரீதியாக செழிப்பாக இருக்கும். சனி பகவான் இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்துவார். பொருளாதார வெற்றியும், பண பலமும் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உங்கள் ரகசியஙக்ளை வெளியே சொல்லாமல் இருப்பது நல்லது. மோதல் போக்கை கடைபிடிக்கும் நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள். இதனால் புதிய பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தெய்வீக காரியங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்கள் இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். எனினும் கணவன் மனைவி இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு வந்து செல்லும். உங்கள் பேச்சில் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் முக்கியப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் தொழிலில் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து செயல்படுவார்கள். உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு உத்வேகமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
எனினும் இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கண் தொடர்பான பிரச்சனைகள் அதிக வயிற்றுவலி மற்றும் செரிமான மற்றும் நரம்பு மண்டல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதால் ஆண்டின் முதல் பகுதியில் எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் சிறிது ஆர்வம் குறையலாம். மனதை ஒரு நிலையாக்கி கொள்வது அவசியம். சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி மேற்கொள்ளுங்கள். தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.