2024-ம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சிய மனதுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிறைய மாற்றங்கள் நடக்கப்போகிறது. எதையும் எதிர்கொள்ளும், துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும். இந்த ஆண்டில் உங்களுக்கு உதவி செய்ய பலரும் முன் வருவார்கள். நீண்ட நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
புதுப்புது பிரச்சனைகளுக்கு நூதனமாக சிந்தித்து முடிவு காண்பீர்கள்.. குடும்ப பிரச்சனைகளில் 3-வது நபர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றலாம். பணியாளர்களுக்கு நீண்ட நாட்கள் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளை குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். வருமானம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். பண வரவு நல்லபடியாக வரத்தொடங்கும். தொழிலில் உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தி நிம்மதி அடையுங்கள். நிர்வாகம், உயரதிகாரிகள் சொல்லும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் இதனால் பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயரை எடுப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றி பெறுவார்கள். இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை இரத்த அழுத்தம் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். சிறு சிறு உடல்நல பிரச்சனைகள் வந்தாலும், இந்த ஆண்டு பொதுவாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிறிய கௌரவ பிரச்சனைகளுக்காக நட்பில் விரிசல் உண்டாகும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷமான சூழலே நிலவும். குடும்பத்தினருடன் இணைந்து கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். முக்கியமான காரியங்களை நீங்கள் தனியாக செய்வதே நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் வயதை அடைந்தவர்கள் திருமணம் கைகூடும்.