சூரிய வடிவோ அல்லது சந்திர வடிவோ அல்லது பிற நவகிரக குறியீடுகளின் வடிவிலோ அல்லது உருவத்திலோ இருக்கும் மச்சம் நவகிரக மச்சம் என்று அழைக்கப்படுகிறது
பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மச்சம் இருக்கும். ஒன்று முதல் பல மச்சங்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு பிறக்கும் போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சூரிய மச்சம்
சூரிய வடிவோ அல்லது சந்திர வடிவோ அல்லது பிற நவகிரக குறியீடுகளின் வடிவிலோ அல்லது உருவத்திலோ இருக்கும் மச்சம் நவகிரக மச்சம் என்று அழைக்கப்படுகிறது. மச்ச சாஸ்திரத்தில் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் மங்கலான மஞ்சள் நிறந்தில் இருக்கும் மச்சம் சூரிய மச்சம் ஆகும். இந்த மச்சம் இருப்பவர்கள் சூரிய பகவானின் அருளை பெற்றவர்கள். இவர்கள் துணிச்சல் மிக்கவர்களாவும், தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் இருப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர்பதவிகளில் இருப்பார்கள். ஆனால் இவர்களில் சிலருக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பித்தம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
சந்திர மச்சம்
உடலின் ஏதேனும் ஒரு இடத்தில் சற்று வெளிர் நிறத்தில் சந்திரன் போன்ற வடிவில் மச்சம் இருக்கும். இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கு அவசர புத்தி இருக்கும். மேலும் மற்றவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த மச்சம் இருக்கும் நபர்களுக்கு முரட்டு சுவாபம் இருக்கும். இவர்களின் செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. மாறிக்கொண்டே இருக்கும். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள்.
குரு வக்ர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு தான் அதிக சிக்கல்.. தவிர்க்க உதவும் பரிகாரங்கள் இதோ..
செவ்வாய் மச்சம்
உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் சிவப்பு நிறத்தில் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மச்சம் இருந்தால் அது செவ்வாய் மச்சம் ஆகும். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்களுக்கு துணிச்சல் அதிகம். எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசுவார்கள். இவர்களில் பலர் காவல்துறை, ராணுவம் தீயணைப்பு துறை போன்ற துறைகளில் பணிபுரிவார்கள்.
புதன் மச்சம்
உடலில் மாநிறத்தில் பெரிதாக காணப்படும் மச்சம் புதன் மச்சம் ஆகும். புதனின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பர். எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் குணம் இவர்களுக்கு இருக்கும். வாக்கு சாதூர்யம் கொண்ட இவர்கள், தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறுவார்கள். ஜோதிடர், விஞ்ஞானி, கணித வல்லுனர் ஏதேனும் துறையில் இவர்கள் இருக்கலாம்.
குரு மச்சம்
உடலில் நீல நிறத்தில் இருக்கும் மச்சம் குரு மச்சம் ஆகும். குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் உடல் பருமன் ஆனவர்களாக இருப்பார்கள்.. ஆன்மீக சிந்தனை அதிகமாக இருக்கும் இவர்களில் சிலர் வழக்கறிஞர்களாகவும், சில ஆசிரியர்களாகவும் இருப்பர். இவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
சுக்கிர மச்சம்
பழுப்பு மற்றும் வெளிர் கலந்த ஒரு நிறந்தில் மச்சம் இருந்தால் அது சுக்கிர மச்சம். ஆனால் இந்த மச்சம் இருப்பது மிகவும் அபூர்வம். சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் பெரும்பாலும் மாநிறத்தில் இருப்பார்கள். இனிமையாக பேசு தன்மை கொண்ட இவர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும். இந்த மச்சம் உள்ளவர்கள் உலகப் புகழ்பெற்ற தலைவராகவோ அல்லது பெரும் கோடீஸ்வரராகவோ இருப்பார்கள். இவர்கள் அழகும், செல்வமும் ஒரே சேர பெற்றிருப்பார்கள்.
சனி மச்சம்
உடலில் எங்காவது பெரிதாக கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அது தான் சனி மச்சம். இந்த வகை மச்சம் தான் பலருக்கு காணப்படுகிறது. சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இவர்கள் கடினமாக உழைப்பார்கள். இவர்களை பற்றி யாராவது புகழ்ந்தால் அதற்கு மயங்கி விடுவார்கள். தனிமை விரும்பிகளாக இருக்கும் இவர்கள், தங்களுக்கு யார் என்ன தீங்கு செய்தாலும், அல்லது நல்லது செய்தாலும் மறக்க மாட்டார்கள்.