குருவின் வக்ரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு வேலையில் தடை, திருமணத் தடை, அவமானம், பண இழப்பு எனப் பல பிரச்னைகள் வரலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த கிரகங்கள் பின்னோக்கி செல்கின்றன. அப்படி கிரகங்கள் பின்னோக்கி செல்லும் போது அது வக்ர காலம் என்று அழைக்கப்படுகிரது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான், செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார்.
டிசம்பர் மாதம் வரை இந்த குரு வக்ர காலம் இருக்கும். பின்னர் டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களில் முதன்மை கிரகமாகவும், சுப கிரகமாகவும் குருபகவான் கருதப்படுகிறார். யோகங்களை வழங்குவதிலும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். அந்த வகையில், இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல அற்புதமான மாற்றங்களை பெற போகின்றனர்.
திருமணப் பொருத்தம் பார்ப்பது ஏன் முக்கியம்? இந்த பொருத்தங்கள் இல்லன்னா கல்யாணமே பண்ணக்கூடாது..
சில ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த வக்ர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். அதன்படி மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வேலையில் தடை, திருமணத் தடை, அவமானம், பண இழப்பு எனப் பல பிரச்னைகள் வரலாம். இவற்றில் இருந்து நிவாரணம் பெற சில குரு பரிகாரங்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரங்கள் செய்வதால் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தடைபட்ட பணிகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவும் சீராக இருக்கும்.
பரிகாரங்கள்
குரு பகவானுக்கு சொந்தமான கொண்டைக்கடலையை மாலையாகவோ அல்லது காணிக்கையாகவோ கொடுக்கலாம். தூய நெய் அல்லது இலுப்பை எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வியாழன் தோறும் இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் குருவின் அருள் கிடைக்கும்.
சிவ வழிபாடு
திங்கள் கிழமை சிவ பெருமானுக்கு விரதம் இருந்தால் கஷ்டங்கள் நீங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபடுவதும், செம்பருத்தி மற்றும் அரளி பூக்களால் சூரியனை வழிபடுவதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் குறையும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாராயணம் செய்வதால் சகல நன்மைகளும் உண்டாகும். நவகிரக தலங்களில் குருவின் தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடலாம்.
கோவில்களில் வழிபாடு
ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை போரூரில் உள்ள ராமநாதீஸ்வர பகவான் கோவிலுக்குச் செல்வது மகத்துவத்தைத் தரும். திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவரை வழிபட்டால் குருவின் அருள் கிடைக்கும். சென்னை பாடி, திருவல்லீஸ்வரர் கோயில், தென் குடித்திட்டை போன்ற குரு அருள் பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் குருவின் அருள் கிடைக்கும்.
வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உகர்ந்த் மஞ்சள் நிற லட்டுகளை வாங்கி தட்சிணாமூர்த்திக்கு நெய்வேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதும், மஞ்சள் நிறப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். இதன் மூலம் குரு வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.