குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: சுக்கிரன் வீட்டில் வக்ரமடையும் குரு; குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள்!

Published : Jul 16, 2024, 04:42 PM IST
குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: சுக்கிரன் வீட்டில் வக்ரமடையும் குரு; குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள்!

சுருக்கம்

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் மிருகசிரீடம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவார். செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குருபகவான் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்வார். இந்த கால கட்டத்தில் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான்:
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் குரு வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்

மேஷம்:  
பாக்ய ஸ்தான அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமான  குரு உங்களுடைய தனஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் பல வழிகளில் வந்து கொண்டே இருக்கும்.  கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு முன்னேற்றமும் இட மாற்றமும் வரும். குரு வக்ர நிலையில் செல்லும் 4 மாதங்களில் தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். வியாழக்கிழமைகளில் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது.

ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

ரிஷபம்: ஜென்ம ராசிக்குள் பயணம் செய்யும் குரு வக்ரமடையும் காலத்தில் தொட்டது துலங்கும்.  குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். திருமணமாகி பிள்ளைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.  குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.  வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க வேண்டும். நல்லதே நடைபெறும்.

கடகம்: லாப ஸ்தானத்தில் குரு வக்ரமடையப்போகிறார். புதிய பதவிகள் தேடி வரும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.  நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம் கை மேல் பலன் கிடைக்கும்.  வேலை செய்யும் இடத்தில்  தலைமை பொறுப்பு தேடி வரலாம். தடைப்பட்ட திருமணம் நடக்கும். குலதெய்வ அனுகிரகம் கைகூடி வரும்.

கன்னி: குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார்.  2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரைக்கும் குரு வக்ர நிலையில் பயணம் செய்வார். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம்.  புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். குரு பகவானின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது கூடுதல் சிறப்பு.   பொருளாதார நிலை மேம்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?
 
விருச்சிகம்: குருபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.  உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறார். சம்பாதிக்கும் பணம் சேமிப்பாக உயரும். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும்.  சுபகாரியம் திருமணம் கை கூடும். பண வருமானத்தில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பண பாக்கிகள் கைக்கு வரும். கடன்கள் அடைப்படும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

மகரம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு ஜந்தாம் வீட்டில் குரு வக்ர நிலையில் பயணம் செய்வது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வையால்  வருமானம் அதிகரிக்கும். கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். குரு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கப்போகிறார் குருபகவான். சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 2025ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் நல்ல செய்தி தேடி வரப்போகிறது.

PREV
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!