குரு பெயர்ச்சி பலன் 2024: ரோகிணியில் பயணம் செய்யும் குரு.. அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்?

By Asianet Tamil  |  First Published Jul 16, 2024, 10:45 AM IST

ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு ஜூன் மாதம் முதல் ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம்மாறுகிறார். இந்த மாற்றத்தால், அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.


அஸ்வினி: சொல்வாக்கு அதிகரித்து பண வருமானம் பல வழிகளிலும் தேடி வரும். 

பரணி:  பண வருமானம் அதிகரித்து புது வீடு வாங்கும் யோகம் கைகூடி,  நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கார்த்திகை: எடுத்த காரியம் கைகூடும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் உருவாகும்.

ரோகிணி: சமூகத்தில் மதிப்பும் மரியாதை உயர்ந்து, வேலையில் புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். 

மிருகசீரிடம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் மனதுக்கு  மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

திருவாதிரை: வருமானம் அதிகரித்து சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம். 

புனர்பூசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் கிடைக்கும். 

பூசம்:   வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். லாப குருவால் கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். 

சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?

ஆயில்யம்:  அலுவலகத்தில் புதிய பொறுப்புகளுடன், புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் செய்வதற்கான தடைகள் நீங்கும்.  
மகம்:   தொழிலில் லாபம் அதிகரித்து, செல்வமும், செல்வாக்கும் கூடும். வீடு கட்ட மனை வாங்கி கட்டலாம்

பூரம்:   வேலையில் புரமோசனுடன் சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். பண வரவு ஏற்படும். 

உத்திரம்: செய்யும் தொழிலில் லாபம் அதிகரித்து, நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களுடன் அன்பும் பாசமும் அதிகரிக்கும்

Latest Videos

undefined

சனி பெயர்ச்சி பலன் 2024: சனி தரும் சச யோகம்; தலையெழுத்து மாறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஹஸ்தம்:   வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சித்திரை:  புதிய தொழில்கள் தொடங்குவதுடன் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். 

சுவாதி: கடன்கள் தீர்ந்து, குடும்பத்தில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை, அன்பு அதிகரிக்கும்.

விசாகம்: பதவி உயர்வு கிடைத்து, பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அன்பு ஏற்படும்,  பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

அனுஷம்:  நிதி நிலை மேம்பட்டு, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். 


கேட்டை:  பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு அதிகரிக்கும். குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்போகிறது.

மூலம்: தொழிலில் இருந்த தடைகள் நீங்கி, வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் அருளால் புதிய வீடு கட்டுவீர்கள். 

பூராடம்:  வருமானம் பல வழிகளிலும் அதிகரித்து கடன்கள் அடைபடும்.

உத்திராடம்:  வேலையில் புரமோசன் கிடைத்து, குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

திருவோணம்: பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது. வருமானத்தினால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். 

அவிட்டம்: பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் வெற்றி பெறும். கொட்டி தரப்போகிறார் குரு பகவான்.

சதயம்:  பணம் விசயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் கவனம் வேண்டும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். 

பூரட்டாதி:   பணப்பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் அளவிற்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடும். 

உத்திரட்டாதி:  சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும். புதிய வீடு கட்டுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.


ரேவதி: வேலையில் புரமோசன் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றியும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். 

click me!