Guru Vakra Peyarchi 2024: கொட்டிக் கொடுக்கப்போகும் குரு; தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்களுக்கு அதிரடி சரவெடி!!

By Asianet Tamil  |  First Published Jul 17, 2024, 11:21 AM IST

குரு பகவான் தீபாவளிக்கு முன்பாக ரிஷப ராசியில் வக்ரமடையப்போகிறார். குருவின் வக்ர நிலை அக்டோபர் 9 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் நீடிக்கப்போகிறது. குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும். குருபார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்ப சில ராசிக்காரர்களுக்கு கோடி நன்மைகள் நாடி வரப்போகிறது. யாருடைய வாழ்க்கையில் தீபாவளிக்கு முன்பாக அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.


மேஷம்: குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.  வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பது போல உங்களின் மன கவலைகள் வெடித்து சிதறப்போகிறது.  மத்தாப்பு ஒளி வெள்ளம் பரவப்போகிறது.

ரிஷபம்:  உங்கள் ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்கிறார் குரு பகவான். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.  கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய நேரம் கைகூடி வந்துள்ளது. பார்க்கும் வேலையில் உயர் பொறுப்புகள் உங்களுக்கு நாடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்: யாருடைய வாழ்வில் அதிரடி மாற்றம்; கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்?

கடகம்: லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார்.  குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். குருவின் பார்வையாலும் பயணத்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறும். கனவுகள் நனவாகும் காலம் கைகூடி வரப்போகிறது.

கன்னி: ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆமிடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். தீபாவளி சரவெடி பட்டாசு போல உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Tap to resize

Latest Videos

சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?

விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து உங்களை பார்வையிடுகிறார். வரவே வராது என்று நினைத்த பணம் தேடி தேடி வரும். கோடி கோடியாக செல்வம் சேர்க்கப்போகிறீர்கள். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது.  கோடி புண்ணியம் தரப்போகும் குருவின் பார்வை  லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.  பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுவது சிறப்பு. குரு பார்வையால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கோடி கோடியாக செல்வம் சேரும் யோக காலம் வந்து விட்டது. தீபாவளிக்கு முன்பாகவே வாழ்க்கையில் மகிழ்ச்சி மத்தாப்பு ஒளிரப்போகிறது.

click me!