தகப்பனான சூரியன், தாயான சந்திரன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். இந்த மாதத்தை பீடை மாதம் என்று சொல்கின்றனர். இது இறைவழிபாட்டிற்கு உகந்த பீடு மாதம். ஆடி மாதத்தில் பொதுவாக திருமணம் சுபகாரியங்கள் செய்வதில்லை ஏன் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் புது வீடு பால் காய்ச்சலாமா? எந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.
ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்:
தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமங்களில் இன்றைக்கும் ஆடிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். புதுமண தம்பதிகளை தலை ஆடி பண்டிகைக்கு அழைத்துப்போய் மணக்க மணக்க விருந்து செய்து கொடுத்து புத்தம் புது ஆடைகளை கொடுத்து பானைகள் நிறைய நிறைய பலகார சீர் கொடுத்து அனுப்புவார்கள்.
சூரியன் சந்திரன்:
ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சந்திரனின் பிரத்யதி தேவதை கௌரி எனப்படும் பார்வதி. இறைவன் அன்னை பார்வதியின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
சுபகாரியம் தவிர்ப்பது ஏன்?
இந்த ஆடி மாதத்தில் திருமணம் நடத்த மாட்டார்கள். புதுமணத்தம்பதியர் சேரக்கூடாது என்றும் சொல்லி பிரித்து வைப்பார்கள். இன்றைய கால இளைய தலைமுறையினருக்கு இதெல்லாம் மூட நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்த சங்கதிகள் எல்லாம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். என்ன காரணத்திற்காக ஆடியில் திருமணம் நடத்துவதில்லை, சாந்திமுகூர்த்தம் குறிப்பதில்லை, புதுமணத்தம்பதிகளை சேர விடுவதில்லை என்று பார்க்கலாம்.
குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: சுக்கிரன் வீட்டில் வக்ரமடையும் குரு; குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள்!
ஆடியில் சேரக்கூடாது:
ஆடி மாதத்தில் புதுமணத்தம்பதியர் இணைந்தார் கரு உருவாகும். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பது தெரிந்ததே. சித்திரை மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும். அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று கடந்த காலங்களில் கூறுவார்கள்.
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி' ஆடி மாதத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை.
சுப நிகழ்ச்சிகள் கூடாது:
திருமணங்கள் கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள்.
ஆடியில் வீடு கிரகப்பிரவேசம்: '
ஆடித்திங்கள் ராவணன் பட்டதும். ஆலமேய்பேறும்பாரத மார்கழி. வீடிட்டான் புரட்டாசி இரணியன். மேவிய ஈசன் நஞ்சு உண்டது மாசியில். படிக்காமெரிந்தது பங்குனி . பாருக்குள்ளேகினன்மாபலி .ஆனியில்வீடிட்டில்லங்ட்டில்லங்குடிவேண்டினேர்ஓடிட்டேஇரந்து ண்பருலகிலே" என்கிறது பழம்பாடல். ஆனி மாதத்தில் மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் நிகழ்ந்தது. ஆடி மாதத்தில் இராவண சம்ஹாரம் நடந்தது.மார்கழி மாதத்தில் பாரத போர் நடந்தது.புரட்டாசி மாதத்தில் இரணிய சம்ஹாரம் நடந்தது.மாசி மாதத்தில் பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது. மன்மதனை சிவ பெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் நிகழ்ந்தது பங்குனி மாதத்தில் நடந்தது என்று கூறப்படுவதால் இந்த மாதங்களில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்.
கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்; இந்த 3 ராசிகளில் ஒருவரா நீங்கள்? அப்போ இனிமேல் ராஜ யோகம் தான்!
கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்:
இன்றைய கால கட்டத்தில் ஆடி மாதத்தில் சில வீடு பால்காய்ச்சுகின்றனர். திடீரென வேலையில் இடமாற்றம் கிடைத்தவர்கள் வேறு வழியில்லை என்றால் வீடு பார்த்து பால் காய்ச்சுகின்றனர். காரணம் இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வதால் வீடு பால் காய்ச்சுவதில் தவறில்லை என்கின்றனர். அதே போல நிலம் வாங்க அட்வான்ஸ் தரலாம். புது வீடு பார்த்து வாங்குவதற்கு அட்வான்ஸ் தரலாம் என்றும் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம். அதே போல ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.