Guru Peyarchi Palangal 2023 : குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு திடீர் திருப்பு முனையும், அதிர்ஷ்டமும் ஏற்படப் போகிறது.
Guru Peyarchi Palangal 2023 : குருபகவான் கடந்த 4-ம் தேதி மேஷ ராசியில் வக்ரம் அடைந்துள்ளார். டிசம்பர் மாதம் வரை குரு வக்ர நிலையில் பயணம் செய்வார். குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு திடீர் திருப்பு முனையும், அதிர்ஷ்டமும் ஏற்படப் போகிறது. எனவே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் :
குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யும் இந்த காலத்தில், பண வரவு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே சிறிய பிரச்சனைகள் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இடமாற்றத்தால் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம் :
குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்கார்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் பிரச்சனையால் தொல்லை ஏற்படலாம். எடுத்த காரியத்தை முடிப்பதில் தடை ஏற்படலாம். வேலையில் கவனம் தேவை. கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. கவனமும், எச்சரிக்கையும் தேவை.
மிதுனம் :
லாப ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபத்தை கொடுப்பார். எனினும் உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடி ஏற்படலாம். அவ்வப்போது பண நெருக்கடி வந்து போகும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் அது எண்ணம் கை கூடும்.
கடகம் :
குருபகவான் 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். தொலைந்து போன பணம், நகை திரும்ப கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால் செல்வம் பெருகும்.. பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்!
சிம்மம் :
குருவின் வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய உற்சாகமும் தெம்பும் பிறக்கும். குரு பார்வை கிடைப்பதால் புதிய வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பண தட்டுப்பாடு நீங்கும். எனினும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
கன்னி :
குரு வக்ர பெயர்ச்சியால் மனக் குழப்பம் நீங்கி, அமைதி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் தடைபட்டு வந்த நிலையில் தற்போது நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
துலாம் :
குரு பகவான் 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் முயற்சியில் தடை தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவு வரும் என்றாலும், செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் :
குரு பகவான் 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். எந்த விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
கருங்காலி மாலை அணிவதால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
தனுசு :
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்களின் அழகும், ஆரோக்கியமும் கூடும். பல வழிகளில் பண வரவு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். நட்பு வட்டம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.
மகரம் :
குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் உங்களுக்கு திடீர் திருப்புமுனை ஏற்படுத்தும். ஏழரை சனியால் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். அலுவலத்தில் அல்லது வீட்டில் விதண்டாவாதம் பேசாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை எனில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம் :
குரு வக்ர் பெயர்ச்சியால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். நல்ல வேலையும், சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை அற்புதமான காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை
மீனம் :
குரு பகவானின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனைவி வழியில் புதிய சொத்துக்கள் கிடைக்கும்.