என் கணிதம், பொதுவாக இதனை நியூமராலஜி என்று அழைப்பார்கள். நம் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு என் மதிப்பு உண்டு. அதை உபயோகப்படுத்தி ஒரு மனிதனுடைய வாழ்க்கை மற்றும் அவருடைய எதிர்காலம் குறித்து கூறுவதை தான் நாம் எண் கணிதம் என்று கூறுகிறோம். லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட ஒரு வார்த்தை தான் நியூமராலஜி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நியூமராலஜியை பொருத்தவரை 11, 22 மற்றும் 33 ஆகிய இந்த மூன்று எண்களும் மிக மிக பலம் வாய்ந்த எண்களாக கருதப்படுகிறது. காரணம் இந்த எண்கள் ஒரு உயர்ந்த நிலையையும், விழிப்புணர்வாக இருப்பதையும் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. இந்த எண்கள் தனித்து நிற்பதை காட்டிலும் இரட்டை இலக்க வடிவத்தில் இருக்கும் பொழுது மாபெரும் சக்தி கொண்ட எண்களாக கருதப்படுகிறது.
எண் 11 என்பது உள்ளுணர்வு, உத்வேகம் மற்றும் அறிவொளியைக் குறிக்கும் முதன்மை எண். எண் கணித அட்டவணையில், எண் 11 உள்ளவர்கள் பெரும்பாலும் மிகவும் உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் அவர்களின் ஆன்மீக பக்கம் மிக வலுவானதாகவும் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் படைப்பாற்றல் மற்றும் தொலைநோக்கு எண்ணம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
எண் 22 என்பது தேர்ச்சி, சக்தி மற்றும் வெளிப்பாட்டைக் குறிக்கும் எண் ஆகும். எண் கணித அட்டவணையில் எண் 22 உள்ளவர்கள் பெரும்பாலும் அவர்களின் இலக்குகளை யதார்த்தமாக வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளவர்களாக திகழ்வார்கள். அவர்கள் பெரும்பாலும் அதிக புத்திசாலிகள் மற்றும் வலுவான நோக்கத்தைக் கொண்டுவர்கள் என்றும் கூறலாம்.
எண் 33 என்பது கருணை, குணப்படுத்துதல் மற்றும் பிறருக்கு சேவை செய்வதைக் குறிக்கும் முதன்மை எண். எண் கணித அட்டவணையில் எண் 33 உள்ளவர்கள் பெரும்பாலும் அதீத இரக்கமுள்ளவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுவதற்கு விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு மிகுந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களாக திகழ்வார்கள்.
மேலே கூறிய அந்த எண்களை தவிர, எண் கணிதத்தில் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் பிற எண்களும் உள்ளன. புதிய தொடக்கங்கள் மற்றும் தலைமைத்துவத்தை குறிக்கும் எண் 1, சுதந்திரம் மற்றும் சாகசத்தை குறிக்கும் எண் 5; ஞானம் மற்றும் நல்ல நோக்கத்தை கொண்ட எண் 7 ஆகியவை ஆகும்.
சுகபோகங்களை அள்ளித்தரப்போகும் சுக்கிரன் - நாளை முதல் எல்லாமே அமோகம் தான்!