சுகபோகங்களை அள்ளித்தரப்போகும் சுக்கிரன் - நாளை முதல் எல்லாமே அமோகம் தான்!

Ansgar R |  
Published : Aug 06, 2023, 04:58 PM IST
சுகபோகங்களை அள்ளித்தரப்போகும் சுக்கிரன் - நாளை முதல் எல்லாமே அமோகம் தான்!

சுருக்கம்

பொதுவாக ஒருவருடைய கிரக நிலைகளை வைத்து தான் அவருடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்களையும், நன்மை தீமைகளையும் கணித்து கூறுகின்றனர் ஜோதிடர்கள். அந்த வகையில் நாளை சுக்கிரன் ஒரு முக்கியமான பெயர்ச்சியை அடைய உள்ளார் அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சுக்கிரன் என்பவர் குடும்ப வாழ்க்கைக்கு உரியவர் என்று பலரும் கூறுவர், காதல் வாழ்க்கை இன்புமுற சுக்கிரன் பெரிய அளவில் உதவுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே வலுவாக உள்ளது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சுக்கிரன் தற்பொழுது சிம்ம ராசியில் இருந்து வக்கிர நிலையில் கடக ராசிக்கு தற்பொழுது இடப்பெயர்ச்சி செய்ய உள்ளார். நாளை ஆகஸ்ட் 7ம் தேதி இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது

காதலின் நாயகனான சுக்கிரன் கடக ராசிக்கு வரும் பொழுது, சூரியனுடன் இணைந்து வருகிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு சில அடிப்படை ஒவ்வாமைகள் ஏற்பட சில வாய்ப்புகள் உள்ளது. ஆகவே உணவுகளை உண்ணும் பொழுது, அதை ஆரோக்கியமானவையாக எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. மாணவர்களுடைய அடுத்தகட்ட படிப்புக்கு ஒரு நல்ல அத்தியாயத்தை துவக்கி வைக்கிறார் சுக்கிரன். கணவன் மனைவி இடையே உள்ள உறவு இன்னும் ஆழமானதாக மாற்றப்படுகிறது. செவ்வாய் மாற்றும் வெள்ளி கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நகையை அடகு வைக்கும் முன்பு இதை செய்தால் போதும்.. சீக்கிரமே நகை நம் கைக்கு வரும்..

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் சுக்கிரன் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் வந்துசேர்கிறார். இதனால் அவர்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும், பல நாட்களாக நிலவி வந்த சில குடும்ப பிரச்சினைகள் பெரிய அளவில் தீர்க்கப்படும். குழந்தை பேருக்காக காத்திருக்கும் பலருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அதேபோல திருமண வயதில் இருப்பவர்களுக்கு விரைவில் சுப முகூர்த்தம் கைகூடும்.

மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை சுக்கிரன் அவர்களுடைய நான்காம் வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்கு தேவையான பல முக்கிய பொருட்களை வாங்கும் ஒரு நிலை உங்களுக்கு ஏற்படும். மோட்டார் சம்பந்தமான விஷயங்களை வாங்கும் பொழுது சற்று கவனமாக வாங்குவது நல்லது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தி உள்ளனர் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்ணின் பெயர் துவங்கும் எழுத்து "இதுவா".. அவர்களை கல்யாணம் பண்ணவர் வாழக்கை ஓஹோன்னு இருக்குமாம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!