திருமண பந்தத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணையும் பொழுது, அவர்களுக்கு இடையே உள்ள பெயர் பொருத்தம் மிகவும் முக்கியமானது என்று ஜோதிடர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் சில எழுத்துக்களில் துவங்கும் பெயர் கொண்ட பெண்களை திருமணம் செய்யும் பொழுது, அந்த கணவனின் வீட்டில் பாக்கியலட்சுமி குடியேறுகிறார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பெண்கள் என்றாலே லட்சுமியின் அம்சத்தை கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே, அதேபோல ஒரு பெண் நினைத்தால் அவர் செல்லுகின்ற குடும்பத்தை, எந்த திசையில் வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் சில எழுத்துக்களில் துவங்கும் பெயர்களை கொண்ட பெண்களை திருமணம் செய்யும்பொழுது, அந்த பெண்ணிடம் இருக்கும் ஐஸ்வர்யம் பெருகி, அவருடைய கணவன் வீட்டாரையும் அது செல்வ செழிப்போடு வாழ வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்.
D என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட பெண்கள்..
இந்த எழுத்தில் துவங்கும் பெயர்களைக் கொண்ட பெண்கள், பொதுவாகவே அதிர்ஷ்டசாலிகளாக வாழ்ந்து வருபவர்கள் தான். ஏற்கனவே அவர்களால் அவர்கள் குடும்பமும் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை சந்தித்திருக்கும். அதேபோல திருமணத்திற்கு பிறகு, அவருடைய அதிர்ஷ்டம், அவர் திருமணம் செய்து செல்லும் அவருடைய கணவர் மற்றும் அவருடைய வீட்டாருக்கும் நன்மையை பயக்கும். மேலும் இந்த பெண்கள் செல்லும் இடங்களில் எல்லாம் செல்வ செழிப்பு பெருகும் என்பார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய அமைதியான குணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் நண்பரின் இயல்புக்கு ஏற்ப நிறத்தின் பூவை கொடுங்கள்.. அது அவர்களுக்கு நன்மை பயக்கும் தெரியுமா?
G என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட பெண்கள்..
இந்த எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட பெண்கள், திருமணம் ஆகி ஒருவர் வீட்டுக்கு செல்லும் பொழுதே அந்த கணவர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். அதுவரை அவருக்கு மூடப்பட்டிருந்த பல வாழ்க்கை கதவுகள் சற்றென்று திறக்கும் வண்ணம் பல அதிர்ஷ்டத்தை கொண்ட பெண்ணாக அவர் திகழ்கின்றார். மேலும் அவர் இருக்கும் இடத்தில் ஐஸ்வர்யம் பெருகும் அதே அளவிற்கு கல்வியும் சிறந்து விளங்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
S என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட பெண்கள்..
பொதுவாக இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள் அனைவரையும் சமமாக மதிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். பல சோகங்களை தங்களுக்குள் மறைத்து வைத்திருந்தாலும், மற்றவர்களிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை பரப்பும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களால் இவருடைய கணவனின் குடும்பமும் செல்வ செழிப்புகளை பெற்று வாழ்வார்கள். தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் குறைத்துக் கொண்டு, பிறருக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இந்த பெண்கள்.
Today Rasipalan 06th August 2023: சுயநல நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள்!!