செவ்வாய் பெயர்ச்சி 2024: ரிஷப ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் செவ்வாய்.. குரு மங்கல யோகம் யாருக்கு?

By Asianet Tamil  |  First Published Jul 12, 2024, 2:11 PM IST

வீரத்தின் நாயகனான செவ்வாய் பகவான்  இன்று (ஜூலை 12) முதல் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.  குரு உடன் கூட்டணி சேர்ந்து அமர்ந்து குரு மங்கல யோகத்தை தரப்போகிறார் செவ்வாய் பகவான். செவ்வாய் குரு கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


மங்கள காரகன் செவ்வாய்:
சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

ரிஷபம்:
செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள குரு உடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால்  உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. செவ்வாய் நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம்.   ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால்   மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. குரு மங்கல யோகத்தால் நல்ல காலம் பிறந்து விட்டது வெற்றி  நடைபோடுங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Kala Sarpa Dosha: ராகு கேது.. உங்க ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கா? பரிகாரம் என்ன?

கடகம்:
உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் இன்று முதல் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.  செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணவருமானம் அதிகரிக்கும். குரு மங்கல யோகத்தால் உங்களுக்கு பதவியில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்:
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது  ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள்.  நிலம், வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.

Tap to resize

Latest Videos

Vastu Tips: வாஸ்து டிப்ஸ்; செருப்பை பொறுப்பா கழற்றி விடுங்க; கண்ட இடத்தில் போட்டால் கஷ்டம் தேடி வருமாம்!

துலாம்:
செவ்வாய்  உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் குரு உடன் இணைந்துள்ளதால் வேலை செய்யும் இடத்தில் கடுமையாக உழைக்க நேரிடும். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.  ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிதானம் அவசியம்.

விருச்சிகம்:
ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் ராசிநாதன் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வீட்டில் வாழ்க்கைத்துணையிடம் வாயைக் கொடுக்காதீர்கள். எங்கும் எதிலும் புத்திசாலித்தனமாக நடப்பது நல்லது. ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து உங்களை பார்வையிடுவதால் காதல் மலரும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்:
உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்குவதில் யோகம் தேடி வரும்.  கணவன் மனைவி இடையேயான பிரச்சினை தீரும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் பணம் தேடி வரப்போகிறது பத்திரப்படுத்துங்கள்.

click me!