தீராத வினை தீர செல்வம் பெருக; எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலை வணங்க வேண்டும் தெரியுமா?

By Asianet TamilFirst Published Jul 11, 2024, 12:06 PM IST
Highlights

நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசியைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது நட்சத்திர பரிகார கோவில்களுக்கு சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.  12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.

நட்சத்திர பரிகார கோவில்கள்:
நட்சத்திர ஆலயங்களுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் சென்று  வழிபட்டால், நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும். ஆத்ம சுத்தியுடன், பய பக்தியுடன் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். நம்பிக்கையுடன் இறைவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.

தீராத பிரச்சினை தீரும்:
நமது பூர்வ ஜென்ம புண்ணியத்தைப் பொருத்து   பிறக்கும் ஊரையும், பெற்றோர்களையும் வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. பல தடைகளும், தீராத பிரச்னைகளும் நன்மைகள் ஏற்படும்.

Personality by birth: குருவாரத்தில் பிறந்தவர்கள் குணமானவர்களாம்; வியாழக்கிழமை பிறந்த நீங்க இப்படிப்பட்டவர்களா?

Latest Videos


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருவாலங்காடு மகா காளி கோவிலை தரிசிக்கலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநாகை ஆதி சேஷன் கோவிலை வணங்கலாம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநாகேஸ்வரம் நாக நாத சுவாமியை வணங்கலாம்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கதிராமங்கலம் துர்க்கா தேவியை வழிபடலாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரை வழிபடலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஆலங்குடி குருபகவானை வழிபடலாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தேனி குச்சனூர் சனீஸ்வரரை வழிபடலாம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிதம்பரம் தில்லைகாளியை வணங்கலாம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருமணஞ்சேரி ராகு பகவானை வழிபடலாம்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூவனுர் வாஞ்சியம்மனை வணங்கலாம்.

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாரூர் ராஜதுர்கையை வழிபடலாம்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் திருவாரூர் ராஜதுர்கையை வணங்கலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருவானைக்காவல் சனீஸ்வரரை வழிபடலாம்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சோழவந்தான் சனீஸ்வரரை வழிபடலாம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவிடை மருதூர் மூகாம்பிகையை வழிபடலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  பல்லடம் அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தென்முக கடவுள் , துர்காதேவியை வழிபடலாம்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநாவலூர் தென்முக கடவுளை வணங்கலாம்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருநாவலூர் தென்முக கடவுளை வழிபடலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மபுரம் தென்முக கடவுள், துர்காதேவியை வழிபடலாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சேதுபட்டி ராஜகாளி அம்மனை வணங்கலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுமுடி சனி , நாகராஜாவை வழிபடலாம்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  திருச்செங்கோடு சனி , நாகராஜாவை வணங்கலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சிபுரம் ஆதி சேஷன் , சித்திரகுப்தரை வழிபடலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவையாறு சனி, தக்ஷினாமூர்த்தியை வணங்கலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவ ஆலயங்களில் சனி பகவானை வழிபடலாம்.

Kala Sarpa Dosha: ராகு கேது.. உங்க ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கா? பரிகாரம் என்ன?

click me!