ஜாக்கிரதை: சனிக்கிழமை இந்த பொருட்களை கொடுத்தால் சனி பகவாவனுக்கு கோபம் வரும்..

By Ramya s  |  First Published Jul 28, 2023, 7:57 AM IST

சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, காகத்திற்கு உணவு வைப்பது போன்ற பரிகாரங்களை செய்தால் சனியால் ஏற்படும் தீமைகளை குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.


நவகிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சனி பகவான மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்படுகிறது. சனி பகவானுக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில், அவரது கோபம் உங்கள் முழு உலகத்தையும் அழிக்கக்கூடியது என்று நம்பப்படுகிறது. சனிக்கிழமை சனி பகவானின் நாளாகக் கருதப்படுகிறது. சாதாரணமாக பேசிய வார்த்தை கூட சில நேரங்களில் மிகப்பெரிய சண்டையில் முடியும். உன் நாக்கில் சனி இருக்கிறது என்று கூட பலரும் சொல்வதை கேட்டிருப்போம். சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, காகத்திற்கு உணவு வைப்பது போன்ற பரிகாரங்களை செய்தால் சனியால் ஏற்படும் தீமைகளை குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை அன்று, குறிப்பிட்ட சில பொருட்களை தானமாகவோ அல்லது பரிசாகவோ வழங்கினால், சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆம். சனிக்கிழமை எந்தெந்த பொருட்களை பரிசாக வழங்கக்கூடாது என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

சாக்லேட்

சனிக்கிழமையன்று ஒருவருக்கு சாக்லேட்டைப் பரிசாகக் கொடுப்பது அந்த நபரின் மன சமநிலையை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி? - அவர்களிடம் ஒளிந்திருக்கும் அந்த மூன்று முக்கிய குணங்கள்!

முத்து 

சனிக்கிழமையன்று ஒருவருக்கு முத்துக்களை பரிசளிக்கக்கூடாது. ஒருவேளை அப்படி கொடுத்தால், இரு தரப்பினரின் குடும்பத்தினருக்கும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அது மரணத்தை கூட விளைவிக்கும்.

கத்திரிக்கோல்

ஒருவருக்கு இரும்பு அல்லது ஸ்டீலால் செய்த கத்தரிக்கோல் பரிசளிப்பது உறவினர்களிடையே நிறைய பதற்றம், மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும்.

வெள்ளி நகைகள்

சனிக்கிழமையன்று வெள்ளி நகைகளை பரிசாக வழங்குவதால், குடும்பத்தில் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

சிவப்பு நிற ஆடை

சனிக்கிழமையன்று ஒருவருக்கு சிவப்பு நிற ஆடைகளை பரிசாக அளித்தால், அந்த நபர் பலர் முன்னிலையில் அவமானப்பட வேண்டிய சூழல் உருவாகும்.

மல்லிகைப்பூ வாசனை திரவியம்

சனிக்கிழமையன்று ஒருவருக்கு மல்லிகை வாசனை திரவியத்தை பரிசளிக்க கூடாது. இதனால் அவருக்கு அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும். அவர் இறக்கும் நிலை கூட ஏற்படலாம்.

சிவப்பு மை பேனா

ஒருவருக்கு சனிக்கிழமையன்று சிவப்பு மை பேனாவை பரிசளிப்பது பெரும் நிதி இழப்பு மற்றும் கௌரவம் குறைவதற்கு வழிவகுக்கும்.

உலோக பாத்திரங்கள்

சனிக்கிழமையன்று ஒருவருக்கு உலோகப் பாத்திரங்களை பரிசாகக் கொடுத்தால், சனியின் கோபம் அதிகரிக்கும், அதைத் தொடர்ந்து வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும்.

வெள்ளை ஆடை

சனிக்கிழமையன்று ஒருவருக்கு வெள்ளை ஆடைகளை பரிசாக வழங்குவது குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், அதைத் தொடர்ந்து திருமண பிரச்சனைகள் மற்றும் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்படும்

ஆரஞ்சு நிற இனிப்பு.

இனிப்புகளை பரிசாக வழங்குவது என்பது மிகவும் பொதுவானது. இருப்பினும், சனிக்கிழமையன்று ஒருவருக்கு ஆரஞ்சு நிற இனிப்புகளை வழங்குவதைத் தவிர்க்கவும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இறப்பு ஏற்படும்.

சனி பகவான் பற்றிய தகவல்கள்.

வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நவகிரகங்களில் அவர் ஒருவர் என்று கூறப்படுகிறது --- எந்தவொரு நபரின் வாழ்க்கையையும் மாற்றும் சக்தி சனிபகவானுக்கு உள்ளது. அது நல்லதாக இருந்தாலும், சரி கெட்டதாக இருந்தாலும் சரி. எனினும் பலரும் நம்புவது போல் சனி கிரகம் ஒரு தீய கிரகம் அல்ல, வேண்டுமென்றே யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை - 

சனியின் இருப்பு ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த விதிகளை பின்பற்றாதவர்கள் சனியால் அழிக்கப்படலாம். சனி பகவான், எப்போதும் மனிதர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நல்ல பாதையைப் பின்பற்றாதவர்கள் சனியின் கோபத்தால் அழிந்து போகிறார்கள்.

சனிபகவானின் அருட் பார்வை கிடைத்தால், ஒருவருக்கு அதிகாரம், தலைமைத்துவத் திறன், வெற்றி போன்ற நேர்மறை அம்சங்கள் கிடைக்கும். சனி சிவபெருமானின் மிகப்பெரிய பக்தராக இருந்தார். தனது நீண்ட ஆயுளுக்காகவும் செழிப்பிற்காகவும் தொடர்ந்து அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் என்று நம்பப்படுகிறது.

இந்த ராசிக்காரர்கள் தான் உறவில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவார்களாம்..

click me!