இத்தொகுப்பில் நாம் நவகிரக கோளாறுகளை நீக்க உதவும் பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
சூரியன் :
நாம் நம்முடைய பித்ருக்களுக்கு செய்யும் திதியின் பலனை நம்மிருந்து பெற்று, நம்முடைய முன்னோர்களுக்கு பித்ரு தேவதைகள் மூலம் சேர்ப்பவர் தான் சூரியன் அல்லது சூரிய பகவான். அதுபோல் நீங்கள் தினமும் நீராடிய பின் கிழக்கு திசை நோக்கி சூரிய பகவானை வணங்கவும். மேலும் புண்ணிய நதியில் நீராடிய பின், நீரில் முழங்காலில் நின்று சூரியனை நோக்கிய வாரு இரண்டு கைகளிலும் நீர் விடுட வேண்டும். இவ்வாறு செய்வது சூரிய பகவானுக்கு உகந்தது ஆகும்.
சந்திரன் :
சந்திரனின் பலம் அதிகரித்தால் மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயரும் என்பது நம்பிக்கை. மேலும் மனிதனின் அறிவாற்றல் சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் தான் அதிகரிக்கும் மற்றும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் குறையும். எனவே, சந்திரதோஷ பரிகாரம் நீங்க, திங்கள் அன்று விரதம் இருந்து, மாலையில் ஏதாவது கோயில் ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும்.
செவ்வாய் :
செவ்வாய் என்பவர் உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் ஆகும். இவர் அங்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் அவள் ஒவ்வொரு செவ்வாய் அன்று விரதம் இருந்து ஏதாவது கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் அவளது செவ்வாய் தோஷம் நீங்கும்.
இதையும் படிங்க: Navagrahas: மனிதனை ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
புதன் :
வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது, புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும்.
குரு பகவான் :
நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்க குரு பலன் அவசியம். இதற்கு வியாழக்கிழமை அன்று விரதமிருந்து மாலை நேரத்தில் கோயிலில் நெய்தீபம் ஏற்ற வேண்டும். அதுபோலவே, வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள் மற்றும் சாதுக்களை வணங்கி அவர்களிடம் ஆசி பெற்றால் குரு தோஷ நீங்கும்.
சுக்கிர பகவான் :
ஒருவரது வாழ்க்கையில் வரும் சுகங்களை அனுபவிப்பதற்கு சுக்கிர பகவானே காரணம். ஒருவேளை உங்களுக்கு சுக்கிர தோஷம் இருந்தால் ஸ்ரீரங்கம் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். மேலும் வெள்ளி அன்று குளித்து விட்டு, விரதமிருக்க வேண்டும். மற்றும் ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடையும், ஏழை எளியவர்க்கு அன்னதானமும் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபட வேண்டும்? சூரியன், குரு பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!
சனி பகவான் :
உங்களது ஜாதகத்தில் சனிபலமாக இருந்தால் நீங்கள் நீண்ட ஆயுளுடனும், குறைவிலாமல் செல்வ வளமும் பெறுவீர்கள். மேலும் சனிக்கு உங்கள் ஆயுளை பாதுகாக்கும் சக்தி உள்ளது. அதுபோல் நீங்கள் என்ன தவறு செய்தீர்களோ அந்த தவறாளே உங்களுக்கு அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான். எனவே, சனி தோஷம் நீங்க ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் விரதமிருந்து மாலையில் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
ராகு :
ஒரு பெண் தவறான உறவில் இருந்து தன் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பவளுக்கு ராகு தோஷம் இருக்கு என்று அர்த்தம். ஆகையால் ராகுவின் ஆதிக்கம் அப்பெண்ணை தாக்காதவாறு அவள் விரைவில் திருமணம் செய்வது நல்லது. எனவே ராகு தோஷம் இருப்பவர்கள், அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கு கர்ப கிரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெய் சேர்த்து வழிபட வேண்டும்.
கேது :
கேது இல்லையெனில் சொர்க்கம் இல்லை. மேலும் கேது நல்லா இருந்தால் தான் ஆன்மீக அதிக நாட்டமும், உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் கிடைக்கும். கேது
விமோசனத்தை அளிப்பவர். ஒருவருக்கு கேது தோஷம் ஏற்பட்டால் அவருக்கு பில்லி சூன்ய துன்பம் மற்றும் ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை போன்றவை ஏற்படும். எனவே, கேது தோஷம் நீங்க சித்ரகுப்தர் கோயிலில் நல்லெண்ணை கொண்டு தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.