ஒருமுறை இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்க! நீங்க நினைத்ததெல்லாம் நடக்கும்...!!

By Kalai Selvi  |  First Published Jul 27, 2023, 7:46 PM IST

உங்களை சூழ்ந்து இருக்கும் பிரச்சினைகள் நீங்கவும் நீங்கள் நினைத்த காரியம் நடக்கவும் இத்தொகுப்பில் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்...


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை வீடும் இல்லை. தன் வாழ்க்கையை இருக்கும் பிரச்சனையை கடவுளிடம் கூறுவதால் ஒருவிதமான அமைதி கிடைக்கும். எனவே தான் பலர் பிரச்சனையிலிருந்து விடுபட அல்லது பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுகிறார்கள். ஒருவேளை உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே சில பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும். உங்கள் பிரச்சனைக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று ஆன்மீகம் சொல்லுகிறது. எனவே நீங்கள் நினைத்தது நடக்க, என்ன பரிகாரம் அதை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க: பணம் தரும் ஏலக்காய் வழிபாடு! தெரியுமா உங்களுக்கு.

Tap to resize

Latest Videos

ஏலக்காய் பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமை அன்று தான் ஏலக்காய் கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இந்த பரிகார. செய்ய  நீங்கள் உங்கள் வீட்டை வியாழன் அன்றே நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • இந்த பரிகாரம் செய்யும் நாளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் லட்சுமியின் பாதத்தில் 3 ஏலக்காய் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
  •  பின்னர் ஒரு சிறிய சிகப்புநிற துணியில் இந்த 3 ஏலக்காயை வைத்து முடிச்சு போட்ட வேண்டும். இதனையடுத்து, உங்களது வலது கையில் அந்த துணையை வைத்து உங்கள் பிரச்சனை சொல்லி, அது சரியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டே உங்கள் தலையை 27 முறை சுற்ற வேண்டும். அதுபோல் இடது கையிலும் வைத்து செய்ய வேண்டும்.
  • இவற்றை அடுத்து, அந்த துணியை வீட்டின் பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்னர் லட்சுமியை மனதார நினைத்து, ஏதாவது ஒரு லட்சுமி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
  • ஏலக்காய் சுற்றி வைக்கப்பட்ட அந்த துணி உங்கள் வீட்டில் பூஜை அறையில் 27 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும். 27 நாட்களுக்குப் பின் அந்த ஏலக்காயை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் செடியில் போட்ட வேண்டும்.

இதையும் படிங்க: ஏலக்காய் சாப்பிடுவதால் எவ்வளவு பிரச்சனைகள் தீரும் தெரியுமா?

இவ்வாறு நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் 27 நாட்களில்  நிறைந்திருப்பதை நீங்கள் காணலாம். மேலும் நீங்கள் நினைத்தது எல்லாம்  நடப்பதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். இந்த பரிகாரத்தை அப்படியே விட்டு விடாமல் நீங்கள் நினைத்தது நடக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் செய்யும் பரிகாரத்தை முழுமனதோடும், நம்பிக்கையுடனும் செய்தால் மட்டுமே அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்கும்.

click me!