ஜனவரி 22 ஆம் தேதி உருவாகும் யோகம் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்களை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் புனிதமான நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகமும், மிருகசிரீட நட்சத்திரமும், 41 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள ஹரி விஷ்ணு முஹூர்த்தம் உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க நாளில் தான் அயோத்தியில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி 3 சுப யோகங்கள் உருவாகிகின்றன. பௌஷ் சுக்ல பக்ஷத்தின் துவாதசி மற்றும் மிருகசிரீட நட்சத்திரத்துடன் நாள் முழுவதும் சர்வார்த் சித்த யோகமும், அமிர்த சித்த யோகமும் உள்ளது. நாளின் முடிவில் ரவியோகமும் ஏற்படும். ஜனவரி 22 ஆம் தேதி உருவாகும் யோகம் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்களை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி 22-ம் தேதி ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். பல வெற்றி வாய்ப்புகள் உருவாகும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு லாபம் கிடைக்கும். உங்களுக்கு இந்த நாளில் நிதி ஆதாயங்களும் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பண லாபமும் கிடைக்கும். உங்கள் தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பக்கம் இருக்கும் அதிர்ஷ்டம் காரணமாக வேலையில் வெற்றி மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் பல தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் அதிர்ஷ்ட வாய்ப்பு உள்ளதால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்
உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் வேலையில் இருந்தால், நீங்கள் நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உங்கள் ஆளுமையும் கவர்ச்சியாக மாறும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சமூக தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களுடன் நட்பு உருவாகும். வேலை அல்லது வியாபாரத்தில் பணம் ரீதியிலான நன்மைகள் கிடைக்கும்.
கன்னி
உங்கள் வசதி வாய்ப்புகள் பெருக்கும். இந்த நாளில் வாகனம், வீடு வாங்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். தொலைதூரப் பயணம் செய்ய நேரலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் நாளாக இந்த நாள் இருக்கும். உங்கள் தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படு. இந்த நாள் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு இருக்கலாம். பணியில் இருப்பவர்களுக்க்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சின் மூலம் மக்களை எளிதாக ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தனுசு
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். முழுமையடையாத வீட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.
மகரம்
இந்த நாள் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கிரகங்களின் சுப தாக்கத்தால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
கும்பம்
தொழிலதிபர்களுக்கு சாதகமான நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. பண வரவு இருக்கும். கடனில் இருந்து விடுபடலாம். இந்த நாள் முதலீட்டிற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
மீனம்
உங்கள் பணியில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். மீன ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன், பொருள் வசதிகளும் பெருகும். தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயத்திற்கு வாய்ப்புள்ளது.