கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக களத்தில் நிற்கும் நம்ம பெங்களூரு அறக்கட்டளை..! ஏழை மக்களுக்கு உதவி

கொரோனாவுக்கு எதிரான போரில் நம்ம பெங்களூரு அறக்கட்டளை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டுவரும் நிலையில், பெங்களூருவாழ் ஏழை மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்துகள், மாஸ்க், சானிடைசர் அடங்கிய கிட்களை வழங்கிவருகிறது நம்ம பெங்களூரு அறக்கட்டளை.
 

namma bengaluru foundation launches next phase of bengaluru fights corona and help poor vulnerable people

கொரோனாவிலிருந்து பெங்களூரு மக்களை காக்க நம்ம பெங்களூரு அறக்கட்டளை நிறுவனரும் ராஜ்யசபா உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகர், பெங்களூரு மாநகராட்சியுடன் இணைந்து அடுத்தகட்ட #BengaluruFightsCorona இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

 நம்ம பெங்களூரு அறக்கட்டளை சார்பில் பெங்களூருவாழ் ஏழை மக்களுக்கு மருத்துவ கிட்கள் வழங்கப்படுகின்றன. தேனாபந்துநகர் பகுதியில் ஏழை மக்களுக்கு அந்த கிட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை முன்னாள் பெங்களூரு மேயர் கௌதம் குமார் தொடங்கிவைத்தார். சிவி ராமன் மருத்துவமனை மெடிக்கல் கண்காணிப்பாளரான மருத்துவர் ராதாகிருஷ்ணாவும் கலந்துகொண்டார்.

namma bengaluru foundation launches next phase of bengaluru fights corona and help poor vulnerable people

பாராசிட்டமல் டோலோ-500எம்ஜி மாத்திரை, விட்டமின் சி IXIS ஜிங்க், ஜிங்கோவிட், ஓ.ஆர்.எஸ், மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவை அடங்கிய கிட் வழங்கப்பட்டது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த கிட் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் ஒரு லட்சம் கிட்களை வழங்க நம்ம பெங்களூரு அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

namma bengaluru foundation launches next phase of bengaluru fights corona and help poor vulnerable people

 மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யவும் ஊக்குவிக்கிறது. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிமீட்டர் ஆகியவற்றையும் வழங்கி உதவி செய்வதுடன், தடுப்பூசி முகாம்களையும் ஏற்பாடு செய்துவருகிறது.

namma bengaluru foundation launches next phase of bengaluru fights corona and help poor vulnerable people
 
நம்ம பெங்களூரு அறக்கட்டளை கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டுவருகிறது. 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவியதுடன், பெங்களூரு மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios