அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் மறைவிடத்தை அமெரிக்காவுக்கு கூறி, அவரை ட்ரோன் தாக்குதலில் கொலை செய்வதற்கு பாகிஸ்தான் பின்புலத்தில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் மறைவிடத்தை அமெரிக்காவுக்கு கூறி, அவரை ட்ரோன் தாக்குதலில் கொலை செய்வதற்கு பாகிஸ்தான் பின்புலத்தில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்காக சர்வதேச செலவாணி நிதியத்திடம் நிதியுதவி கோரியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அமெரிக்காவுக்கு உளவு கூறியதன் மூலம் இனிமேல் பாகிஸ்தானுக்கு சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்
கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
அதன்பின் அல்கொய்தா அமைப்பை ஒசாமாவின் உதவியாளராக இருந்த அல் ஜவாஹிரி ஏற்று வழிநடத்தி வந்தார். இவரை கொல்வதற்கு அமெரிக்க பல முறை முயன்றும், அமெரிக்க ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி மறைந்து வாழ்ந்து வந்தார். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அல்ஜவாஹிரி மறைந்து வாழ்ந்து வந்தார்.
இதனால், அல்ஜவாஹிரி எங்கு வாழ்கிறார் என்பது தெரியாமல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி, அல்ஜஹாரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் அல்ஜவாஹிரி ஊடகத்தின் முன் தோன்றி விளக்கம் அளிப்பது வாடிக்கையாக இருந்தது.
இந்தமுறை அல்ஜஹாரியை கட்டம்கட்டி தூக்க அமெரிக்க திட்டம் போட்டது. ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு பாகிஸ்தானை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டதோ அதேபோல் அல் ஜவாஹிரியின் கதையை முடிக்கவும் பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது.
இலங்கை பொருளாதார சிக்கலுக்கு கோத்தபய ராஜபக்சே காரணம் இல்லை: ரணில் விக்கிரமசிங்கே
இந்த முறை பாகிஸ்தானின் பொருளாதார நிலையை தங்களுக்குச் சாதகமாக அமெரி்க்கா பயன்படுத்தியது.
அல்ஜவாஹிரியின் மறைவிடத்தை உளவுகூற பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா அவரை கட்டம்கட்டி கதையை முடித்துவிட்டது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா, இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வென்டி ஷர்மானுடன் கடந்த சில நாட்களுக்கு முன் பேசியுள்ளார். அப்போது சர்வதேச செலவாணி நிதியம் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க மறுக்கிறது என்றும், தற்போது 120 கோடி டாலர்கல் பாகிஸ்தானுக்குத் தேவை என்றும் தெரிவித்துள்ளார். இதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா, அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்துகூட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கிண்டலாக கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பிரதமர் பார்க்க வேண்டிய வேலையெல்லாம் பஜ்வா பார்த்து வருகிறார், அமெரிக்கா ஐஎம்எப் மூலம் நிதி வழங்கினால்நாம் பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் குத்தலாகப் பேசியிருந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் 30ம் தேதி அமெரிக்க ராணுவத் தளபதி மைக்கோல் எரிக் குரிலாவுடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா தொலைப்பேசியில் பேசினார். இருவரின் உரையாடலுக்கு அடுத்த நாள் காபூலில், அல் ஜஹாரி இல்லத்தின் நோக்கி ட்ரோன்கள் மூலம் ஏவுகணை வீசி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
வரலாற்றில் முதல் முறை... பாகிஸ்தான் டிஎஸ்பியாக ஒரு இந்து பெண் பதவியேற்பு!!
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா, அமெரிக்க ராணுவத் தளபதியுடன் பேசுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தானிலிருந்து காபூல் நகருக்கு, அல் ஜவாஹிரி சென்றார். அவர் காபூல் சென்றபின் அங்கு எங்கு மறைந்துள்ளார் என்ற விவரத்தை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு உளவு சொல்லியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கா கொலை செய்தபின், பாகிஸ்தானுக்கு அது தர்மசங்கடத்தையும், பெரிய கறையையும் ஏற்படுத்திக்கொண்டது. அதுபோன்ற செயலை ஜவாஹிரி விஷயத்தில் பாகிஸ்தான் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் பாகிஸ்தானிலிருந்து காபூலுக்கு அல்ஜஹாரி புறப்பட்டுச் சென்றதும் அவரின் பயணம், மறைவிடத்தை அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கூறியிருக்கலாம்.
எது எப்படியோ, சர்வதேச செலவாணி நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு மிக விரைவாக கடனுதவி தரப்படும் என்று எதிர்பார்க்கலாம்….!