ஆண், பெண் உடலுறவில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியை மீறி ஆணுறையை பயன்படுத்தாமல் இருப்பது குற்றம் என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆண், பெண் உடலுறவில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியை மீறி ஆணுறையை பயன்படுத்தாமல் இருப்பது குற்றம் என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கனடாவில் ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருந்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த 2017ம் ஆண்டு பழக தொடங்கி உள்ளனர். பிறகு நேரில் சந்தித்து இருவரும் பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் உடல் உறவில் ஈடுபடலாமா என ஆண் கேட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆணுறை அணிந்து கொண்டால் அதற்கு சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். முதலில் அந்த ஆண் பெண்ணிடம் சரி என்று கூறி ஆணுறை அணிந்து உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அன்றே இரண்டாம் முறை உடல் உறவில் ஈடுபட்டபோது அந்த ஆண் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை அணியாமல் உறவு கொண்டுள்ளார்.
இதையும் படிங்க;- ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது
சிறிது நேரத்திற்குப் பின் இதை உணர்ந்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அந்த பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்நாட்டின் விசாரணை நீதிமன்றம் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்தது. குற்றம்சாட்டப்பட்ட ஆணின் தரப்பு, அந்த பெண்ணின் விருப்பம் மற்றும் சம்மதத்துடன் தான் உடல் உறவில் ஈடுபட்டேன் என முன்வைத்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இதற்கு எதிராக அந்த பெண் கனடா நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்து நீதிமன்றம் உடல் உறவின் போது பெண்ணின் விருப்பத்தை மீறி நாம் செயல்படுவது முறையல்ல. அந்த பெண் ஏற்கனவே இது குறித்து ஆணிடம் தெளிவாக தனது விருப்பத்தை கூறிய பின்னரும், அவர் அதை மீறி செயல்பட்டது குற்றமாகும். பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை பயன்படுத்தாமல் இருந்தது பாலியல் குற்றமாகவே கொள்ளப்படும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- பிரிந்து சென்ற காதல் மனைவி!ஏக்கத்தில்மச்சினிச்சிக்கு பிராக்கெட் போட அக்கா புருஷன் செய்த வேலையை நீங்களே பாருங்க