12வது பிறந்தநாளில் ஓய்வை அறிவிக்க உள்ள கோடீஸ்வர சிறுமி.. அவரின் வருமானம் எவ்வளவு தெரியுமா?

By Ramya s  |  First Published Jul 31, 2023, 1:10 PM IST

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்ஸி கர்டிஸ், என்ற இளம் தொழில்முனைவோர்,  Pixie’s Fidgets என்ற தனது பொம்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


நம்மில் பெரும்பாலோர் ஓய்வு காலத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் சூழலில் 11 வயது சிறுமி ஒருவர் தனது 12வது பிறந்தநாளை ஓய்வூதியத் திட்டத்துடன் கொண்டாடுகிறார். ஆம்.. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்ஸி கர்டிஸ், என்ற இளம் தொழில்முனைவோர்,  Pixie’s Fidgets என்ற தனது பொம்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் தனது தாயார் ராக்ஸி ஜசென்கோவுடன் 2021ல் தனது நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனத்தில் இருந்து நல்ல லாபத்தையும் பெற்றார்.

ஆம். இளம் கோடீஸ்வரராக இருக்கும் பிக்ஸி, தற்போது ஒவ்வொரு மாதமும் $133,000க்கு மேல் சம்பாதிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிக்ஸியின் தாய், ராக்ஸி ஜசென்கோ தனது மகளுக்கு 12வது பிறந்தநாள்-ஒய்வு விழாவைத் திட்டமிடும் யோசனையை வழங்கி உள்ளார். வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தனது மகளுக்கு அவர் கற்பித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

எனவே தற்போது பள்ளியில் கவனம் செலுத்துவதற்காக பிக்ஸி தனது தொழிலில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து ஒரு வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பிறந்தநாள் விழா விருந்தினர்களுக்கு $50க்கு மேல் மதிப்புள்ள அழகு சாதன பொருட்கள் அடங்கிய பைகளை பரிசாக வழங்கி உள்ளார். களை ஆடம்பர ஆஸ்திரேலிய அழகு பிராண்டான MCoBeauty ஸ்பான்சர் செய்தது.

பிக்ஸி கர்டிஸ் கொரோனா காலக்கட்டத்தின் போது  ஃபிட்ஜெட் ஸ்பின்னர் வணிகத்தைத் தொடங்கினார். மேலும் பிக்ஸி கர்டிஸ் அடிக்கடி தனது ஆடம்பரமான, விலையுயர்ந்த வாழ்க்கை முறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறார், அவருக்கு இன்ஸ்டாவில் 130,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்" என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த பணக்கார சிறுமி மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார், இருப்பினும் அவரால் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட முடியாது. விலை உயர்ந்த கார் அவரது 10வது பிறந்தநாளில் அவரது தாயிடமிருந்து பரிசாக கிடைத்தது. எனினும் இன்ஸ்டாவில் சில பயனர்கள் பிக்ஸியின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றி கவலை தெரிவித்தனர். “போய் குழந்தையாக இரு. நீங்கள் வயது வந்தவராக இருக்க முயற்சிப்பதை தவிர்க்கலாம் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் மாற்றி யோசித்த ரோஹன்.. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

click me!