பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி, 200 பேர் காயம்

By SG Balan  |  First Published Jul 30, 2023, 7:08 PM IST

குறைந்து 50 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் சக்திவாய்ந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜாரினில் உள்ள கார் பகுதியில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) கட்சியின் தொழிலாளர்கள் மாநாட்டில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. "கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் விழாவில் உரையாற்ற இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பு வெடிகுண்டு நிகழ்ந்துள்ளது" என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அக்தர் ஹயாத் கந்தாபூர் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

குறைந்து 50 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பேஷன் உடைகளுக்காக பாராட்டு பெற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி!

At least 40 people were killed and over 100 injured in a blast at a political party meeting in Pakistan.
Those who used to plant bombs for others today they themselves have been dealt with. pic.twitter.com/qQwAcCkUkK

— Bhavesh Fauji🇮🇳 (@shilpirajput0)

ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்நாட்டின் 1122 அவசர உதவி மையத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி டான் சொல்கிறார்.

இந்நிலையில், ஜேயுஐ-எஃப் (JUI-F) தலைவர் ஹபீஸ் ஹம்துல்லா இன்று மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்ததாகவும் சில தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என்றும் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், "நான் குண்டுவெடிப்பை கடுமையாகக் கண்டிக்கிறேன், இது ஜிஹாத் அல்ல, பயங்கரவாதம்" என்று கூறினார்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த ஹம்துல்லா, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு மாகாண அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்த குண்டுவெடிப்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரிய அவர், தங்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்துவது இது முதல் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். “இதுபோல் முன்பும் நடந்துள்ளது... எங்கள் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என அவர் தெரிவித்துள்ளார்.

அபு தாபி முதல் லண்டன் வரை.. 14 நாடுகளுக்கு காரில் பயணம் சென்ற இளைஞர்கள் - எதை நிரூபிக்க இந்த பயணம் தெரியுமா?

click me!