
ரெமி லூசிடி என்ற அந்த 30 வயது பிரெஞ்சு நாட்டு இளைஞர்,ஹாங் காங் நாட்டில் உள்ள ட்ரெகுண்டர் டவர் வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் எறியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்று சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
லூசிடி இறந்து கிடந்த அந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று மாலை சுமார் 7.30 மணி அளவில் 68வது மாடியில் தான் பணி செய்து கொண்டிருந்த வீட்டின் ஜன்னல் கதவுகளை லூசிடி தட்டியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதை கேட்ட போலீசார், அந்த நபர் கூறுவதில் உண்மைகள் இருக்க அதிக அளவிலான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார். 68வது மாடியில் சிக்கிக் கொண்டிருந்த லூஸிடி, அவரிடம் உதவி கேட்டு கதவை தட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஹாங்காங் போலீசார் லூசிடியின் ஒரு கேமராவையும், அவருடைய பிரெஞ்சு நாட்டு அடையாள அட்டை ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் பிரான்ஸ், அமீரகம் மற்றும் போர்ச்சுகல் என்று பல நாடுகளில் உள்ள உயரமான பல கட்டிடங்களில் ஏறி சாதனை புரிந்து வந்தவர் லூசிடி.
அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹாங் காங் நகரில் உள்ள டைம் ஸ்கொயர் கட்டிடத்தின் உச்சியில் நின்று அவர் எடுத்த ஒரு புகைப்படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வினையாகும் என்பதற்கு சான்றாக மாறியுள்ளார் இந்த இளைஞர்.
பேஷன் உடைகளுக்காக பாராட்டு பெற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி!