அபு தாபியை சேர்ந்த இரு இளைஞர்கள், 30 நாட்களில் ஒன்பதாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து, சுமார் 14 நாடுகளின் வழியாக சென்று, இறுதியில் லண்டனை அடைந்து தங்கள் கனவுகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்றனர்.
அமீரகத்தை (UAE) சேர்ந்த அந்த இரு இளைஞர்களும், அபுதாபியில் இருந்து துவங்கி லண்டனுக்கு தங்கள் காரில் சுமார் ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கு இடையிலான பயணத்தில், சுமார் இரண்டு கண்டங்களையும், 14 நாடுகளையும் அவர்கள் கடந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட தொலைவிலான பயணங்கள் செல்வது பலருக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த இரண்டு இளைஞர்களும் இந்த நீண்ட நெடும் பயணத்தை மேற்கொள்ள வேறொரு முக்கிய காரணமாக இருந்தது.
அடித்தது ஜாக்பாட்!! துபாயில் மெகா பரிசை வென்றார் இந்தியர் ஒருவர்..! மாதம் ஒன்றுக்கு இவ்வளவு பணமா??
அதுதான் தங்களது, அமீரக பாஸ்போர்ட்டின் பலத்தை நிரூபிக்கும் ஒரு பயணம், அமீரக பாஸ்போர்ட்டை கொண்டு, உங்களால் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்திற்காக பல முன்னேற்பாடுகளை செய்து, சிறந்த வாகனம் ஒன்றை தேர்ந்தெடுத்து, அமீரகத்தை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும், 14 நாடுகளுக்கு எந்தவித தடையும் இல்லாமல் சென்று வந்துள்ளனர்.
30 நாட்களுக்குள் தங்கள் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக மிக கடுமையாக திட்டமிட்ட இந்த இருவரும் அபுதாபியில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர் பின் சவுதி அரேபியா, குவைத், ஈராக், துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, லியச்ட்டேன்ஸ்டைன், ஸ்விட்ஸர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து என்று 13 நாடுகளை சுற்றி இறுதியாக இவர்கள் தங்களது 14வது நாடான லண்டனை சென்றடைந்தனர்.