விமானத்திற்குள் பாலியல் சீண்டல்.. மரண வேதனைக்குள்ளான தாய் மற்றும் மைனர் மகள் - கண்டுகொள்ளாத ஊழியர்கள்!

By Ansgar R  |  First Published Jul 30, 2023, 2:21 PM IST

பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமான சேவை மூலம் பயணித்தபொழுது, அதில் இருந்த ஒரு தாய் மற்றும் அவரது மைனர் பெண் ஆகிய இருவரும், சகாபயணி ஒருவரால் சுமார் 9 மணி நேரம் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளனர். 


ஆனால் அந்த நபரை தடுக்காமலும், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்த நிலையில், தற்போது சட்ட ரிதியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் அந்த பாதிக்கப்பட்ட பெண்மணி. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற ஆவணங்களின்படி, நியூயார்க் நகரத்தில் உள்ள JFK விமான நிலையத்திலிருந்து, கிரீஸின் ஏதென்ஸுக்கு சென்ற விமானத்தில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. 

அந்த 9 மணிநேர விமான விமான பயணத்தில், பலமுறை அவர்கள் உதவிக்காக அழைத்தும், அதை அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர் என்றும். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் ஏற்கனவே குடிபோதையில் இருந்தபோதிலும், அவருக்கு தொடர்ந்து மதுவை, பணிப்பெண்கள் வழங்கினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குடிபோதையில் அந்த தாய் மற்றும் மகளிடம் தவராக நடந்துகொண்ட அந்த நபர், தொடர்ச்சியாக 9 மணி நேரம் பலமுறை தங்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்தார் என்றும், ஆனால் பாலியல் வன்கொடுமை குறித்து உரிய அதிகாரிகளுக்கோ, அல்லது அமெரிக்க சட்ட அமலாக்கத்திற்கோ எச்சரிக்காமல், குடிபோதையில் இருந்த அந்த நபரை விமானத்தை விட்டு வெளியேற ஊழியர்கள் அனுமதித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடித்தது ஜாக்பாட்!! துபாயில் மெகா பரிசை வென்றார் இந்தியர் ஒருவர்..! மாதம் ஒன்றுக்கு இவ்வளவு பணமா??

வெளியான நீதிமன்ற ஆவணங்களின்படி பாதிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் அவரது 16 வயது மைனர் மகளின் அருகில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் அமர்ந்திருக்கிறார். அவர் அங்கு அமர்ந்த சில நிமிடங்களில், அந்த மைனர் பெண்ணிடம் பேசிக் கொடுக்க துவங்கிய நிலையில், அதை ஆரம்பத்திலேயே அந்த பெண் புறக்கணித்துள்ளார். 

இதனை அடுத்து கோபம் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணின் கழுத்தில் கை வைத்த நிலையில், தனது மகள் ஒரு மைனர் என்றும், தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த தாய் கூறியுள்ளார். ஆனால் அதை சற்றும் கண்டு கொள்ளாத அந்த நபர், அந்த மைனர் பெண்ணிடம் அவருடைய முகவரியை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். எதிர்த்து பேசிய அவருடைய தாயின் கைகளையும் பிடித்து இழுத்துள்ளார். 

அதன் பிறகு அவர்கள் இருக்கையை காலால் தள்ளுவது, அவர்கள் மேல் கை வைப்பது போன்ற விஷயங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார் அந்த நபர். ஒரு கட்டத்தில் பயந்து போன அந்த மைனர் சிறுமி, தன் தாயின் மடியில் படுத்து கொண்டபொழுது, அவர் ஆடைக்குள் தனது கைகளை விட்டு, தாக செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். 

இதை கண்டு அதிர்ந்த அந்த தாய், செய்வதற்காக தங்களுக்கு வேறு இடம் மாற்றிக் கொடுக்குமாறு விமான ஊழியர்களிடம் கெஞ்சியும், அவர்கள் செய்வதறியாது நின்றுள்ளனர். சுமார் 9 மணி நேரம், பல விதங்களில் தாய்க்கும் அந்த மகளுக்கும் தொடர்ச்சியாக பாலியல் சீண்டல்கள் கொடுத்த நிலையில், இறுதியாக அவர்களுக்கு உதவ ஒரு ஆண் பயணி முன்வந்து, தனது இருக்கையை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த நபரின் பக்கத்தில் அவர் அமர்ந்துள்ளார். 

ஆனால் இந்த 9 மணி நேர நரக வேதனையை அனுபவித்து, எத்தனையோ முறை புகார் அளித்தும் விமான பணிப்பெண்களோ, அல்லது பிற ஊழியர்களோ அவர்களுக்கு உதவவில்லை.மேலும் விமானம் தர இறங்கிய பிறகு, உரிய அதிகாரிகளுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் கொடுக்காமல் அந்த நபரை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதித்ததாகவும் தற்பொழுது அவர்கள் கூறியுள்ளனர்.

போரால் நிலங்களை இழந்து தவித்த இலங்கை தமிழர்கள்..! அதிரடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

click me!