Xi Jinping : சீனா அரசியலில் புது வரலாறு..! மாவோ சாதனை ப்ரேக் - 3வது முறையாக அதிபராக பொறுப்பேற்ற ஜி ஜின்பிங்

By Raghupati R  |  First Published Mar 10, 2023, 2:19 PM IST

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார்.


சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார்.

இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. அதுமட்டுமில்லாமல், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Tap to resize

Latest Videos

சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஜி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்துள்ளனர். ஜி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்த பெருமையையும் பெறுகிறார்.

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராகி இருக்கும் முதல் நபர் ஜி ஜின்பிங் தான். இதோடு இல்லாமல், ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராக இருப்பார் என்றும், விரைவில் அதற்கான முயற்சிகளை செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..ஃபார்ஸி: மனைவியை துண்டு துண்டாக்கிய கணவன்.. கள்ளநோட்டு மிஷினால் வந்த வினை - திரைப்படத்தை மிஞ்சிய க்ரைம்

இதையும் படிங்க..இப்போ அடுத்த 13 பேர் எஸ்கேப்.! கட்சி தாவும் நிர்வாகிகள்.. காலியாகும் பாஜக கூடாரம் - அப்செட்டில் அண்ணாமலை

click me!