வைரல் வீடியோ: பட்டமளிப்பு விழாவில் ‘சீனப்பெண்’ செய்த சேட்டை!.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.!!

By Raghupati R  |  First Published Mar 10, 2023, 11:32 AM IST

இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சீனப் பெண் செய்த ஒரு நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பட்டமளிப்பு நாள் என்பது எந்தவொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய தருணம் ஆகும். ஒவ்வொருவரும் தங்கள் பட்டமளிப்பு விழாவை அவரவர் வழியில் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த தருணத்தை கொண்டாடிய சீன மாணவி ஒருவர் இணையத்தில் பரபரப்பாக மாறி தனது செயலை வைரல் வீடியோவாக மாற்றியுள்ளார்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த 24 வயதான சென் யினிங், இங்கிலாந்தில் உள்ள ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி மாதம் பட்டம் பெற்றதைக் கொண்டாடும் வகையில், குங் ஃபூ பாணியில் சைட் ஃபிளிப்பை நிகழ்த்திய வீடியோ ஆன்லைனில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. தென் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

நடனப் பயிற்சி மற்றும் செயல்திறனில் முதுகலை பட்டம் பெற்ற சென், உற்சாகத்தின் காரணமாக இப்படியொரு சைட் ஃபிளிப்பை செய்ததாக கூறினார். இந்த வீடியோ குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், எல்லா சீன மக்களும் குங்ஃபூ மாஸ்டர்கள் அல்ல என்பதை வெளிநாட்டவர்களுக்கு விளக்குவது இப்போது மிகவும் கடினமாக இருக்கும் என்று பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Chinese student Chen Yining陈奕宁in UK, celebrating graduation in Kung fu style, remembered by teachers and fellow graduates, and goes viral in China’s social media today. pic.twitter.com/zjrbo9V4Se

— China in Pictures (@tongbingxue)

இதையும் படிங்க..ஃபார்ஸி: மனைவியை துண்டு துண்டாக்கிய கணவன்.. கள்ளநோட்டு மிஷினால் வந்த வினை - திரைப்படத்தை மிஞ்சிய க்ரைம்

click me!