எலான் மஸ்க் விசித்திரமாக நடனம் ஆடும் பழைய வீடியோ இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க் விசித்திரமாக நடனம் ஆடும் பழைய வீடியோ இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டிவிட்டர் ஆகியவையின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் தனது விசித்திரமான நடத்தைக்கு பெயர் பெற்றவர். அவர் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லா ஜிகாஃபாக்டரி என்ற தனது நிறுவனத்தின் ஆலையில் ஒரு விசித்திர நடனமாடினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பை உயர்த்த அத்தியாவசியப் பொருட்களின் விலை முறைப்பு!!
2020 ஆம் ஆண்டில் டெஸ்லாவின் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் முதல் விநியோகத்தைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் மஸ்க் ஆடிய நடனம் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் அவர் நடனமாடிக்கொண்டே தனது பிளேசரை கழற்றி எறிகிறார். இந்த வீடியோவை டெஸ்லா ஓனர்ஸ் சிலிகான் வேலி என்ற பயனர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவிகளுடன் பேச வைக்கும் ஓயிஜா போர்டு கேம்.. ஆர்வகோளாறில் விளையாடிய சிறுமிகள்.. பதிலுக்கு நடந்த அமானுஷ்யம்
அதில் மஸ்க் நடனம் ஆடுவதையும், தொழிற்சாலையின் கார்ட்டூனுடன் NSFW (வேலைக்கு பாதுகாப்பானது இல்லை) டி-ஷர்ட்டைக் காட்ட அவரது ஜாக்கெட்டைக் கழற்றுவதையும் காணலம். தற்போது வைரலாகும் இந்த வீடியோவுக்கு டிவிட்டர் பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 576,000க்கும் அதிகமான பார்வைகளையும் 3,500க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
. knows how to get down pic.twitter.com/yIwcByxAuL
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV)