பெருங்கடல்களில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் 171 ட்ரில்லியன் அளவுக்கு இருப்பதாகவும் இது அடுத்த 17 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயரும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகப் பெருங்கடல்களில் 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல்கள், மத்தியதரைக் கடல் ஆகியவற்றில் இருந்து 1979 முதல் 2019 வரை சேகரிக்கப்பட்ட 12 ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் அறிக்கை PLOS ONE என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில், 2005ஆம் ஆண்டு முதல் உலகப் பெருங்கடல்களில் பிளாஸ்டிக் மாசுடு விரைவாக கூடிக்கொண்டே வருவதை கண்டறிந்துள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பின் இருந்து தற்போது வரை பிளாஸ்டிக் குப்பைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன.
undefined
62 வயது மூதாட்டிக்கு 25 வயது கணவர்! 8வது குழந்தைக்கு காத்திருக்கும் டிக்டாக் ஜோடி!
இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் 2040ஆம் ஆண்டில் பெருங்கடல்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் 2.6 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக செயல்பட்டுவரும் 5 கியர்ஸ் என்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறது. "உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கடலை அடைந்ததும் சின்னச் சின்னத் துண்டுகளாக ஆகிவிடுகின்றன. இந்த பிளாஸ்டிக் துகள்களை எளிதில் சுத்தம் செய்துவிட முடியாது." என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் லிசா எர்டில் கூறுகிறார்.
கடலில் பிளாஸ்டிக் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்று கூறும் லிசா, "கடல் ஒரு சிக்கலான இடம். நிறைய கடல் நீரோட்டங்கள் உள்ளன, வானிலை மாற்றம் மற்றும் நிலப்பகுதியில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றின் தாக்கம் கடல்களிலும் ஏற்படும்" என்று விளக்குகிறார்.
'கடல்களை சுத்தப்படுத்துதல், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தல் போன்றவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், மறுசுழற்சி முறைகளைப் பின்பற்றி மாசுபாட்டின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு' என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது தற்பெருமையின் உச்சம்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் காங்கிரஸ்!